முதல் குற்றவாளி ‘முத்துராமலிங்க தேவர்’! வன்னியரசு போட்ட ட்வீட்! போனை போட்ட ‘சவுத்’! என்ன சொன்னார்?
சென்னை : 'சாதிய வாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு வீரவணக்கம்' எனவும் 'படுகொலை வழக்கில் முதல் குற்றவாளி முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட சாதி வெறியர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்' என விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு ட்வீட் பதிவிட்டு நிலையில், தென் மாவட்டங்களில் அமைதியாக இருப்பது பிடிக்கவில்லையா என தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இமானுவேல் சேகரன் 1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவர் கொல்லப்பட்ட வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர் இறந்த நாளான செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினரும், பல சமுதாய அமைப்பினரும் பங்கேற்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதும் வழக்கம். இதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பாதுகாப்பு பலப்படுத்தபடுவதும் வழக்கம்.

இமானுவேல் சேகரன்
இமானுவேல் சேகரன், இந்திய ராணுவத்தில் பணியாற்றிப் பின்னர் தலித்களின் உரிமைகளுக்காகப் போராடியவராவார். இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராகவும், அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராசரின் அன்பைப் பெற்றவராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இராமநாதபுரத்தில் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து திமுக , அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அஞ்சலி செலுத்தினர்.

வன்னியரசு
இந்நிலையில் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,"செப்டம்பர் 11 சாத்தியவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகளின் வீரவணக்கம் படுகொலை வழக்கின் முதல் குற்றவாளி முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட சாதி வெறியர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்' என பதிவிட்டு இருந்தார்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
இந்த நிலையில் இந்த ட்விட்டர் பதிவு தொடர்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இயக்கத்தை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் வன்னியரசுவிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த ஆடியோவில் பேசும் இசக்கி ராஜா,"இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு இரங்கல் தெரிவிக்க வேண்டியது அனைவரும் கடமை அனைவரும் அதனை செய்து வருகின்றனர். ஆனால், நீங்கள் சாதிய வெறியர்களால் கொலை செய்யப்பட்ட வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனக் கூறியிருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்?

சாதி மோதல்?
தென் மாவட்டங்களில் அனைத்து சமூக மக்களும் ஒன்றாக இருக்கிறோம் நீங்கள் பிரிவினையை தூண்ட பார்க்கிறீர்களா என கேட்ட அப்போது பதிலளித்த வன்னியரசு தான் விடுதலை செய்யப்பட்டார் என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேன் என கூறினார். காங்கிரஸ் கட்சி செய்த தீங்கு காரணமாகவே எங்களுக்குள் பிளவு வந்தது. ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டு நாங்கள் தற்போது வரை ஒற்றுமையாக தான் இருக்கிறோம். ஆனால் முத்துராமலிங்க தேவர் பெயரை பயன்படுத்தி நீங்கள் பதிவு செய்திருப்பதை பார்க்கும்போது தென் மாவட்டங்களை மக்கள் அமைதியாக இருக்கக் கூடாது அதனை நீங்கள் பெரிது படுத்த வேண்டும் என நினைக்கிறீர்களா?

கண்டனம்
தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களின் அனைத்து twitter பதிவுகளும் இம்மானுவேல் சேகரனுக்கு நினைவஞ்சலி செலுத்துவது போல இருக்கிறது, ஆனால் உங்களது பதிவு மட்டும் மோதலை தூண்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இருக்கிறது இதற்கு என்ன காரணம்" என அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications