நிலம் பத்திரப்பதிவு செய்வோருக்கு தமிழக பதிவுத்துறை தந்த குட் நியூஸ்! சார் பதிவாளர் ஆபீசில் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் வீடு, மனை வாங்குபவர்கள், அதற்கான பத்திரங்களை பதிவு செய்வது வழக்கம்.. அந்தவகையில், முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வமும், மகிழ்ச்சியும் காட்டி வருகிறார்கள். இதையொட்டியே அந்தந்த சிறப்பு நாட்களில் கூடுதல் டோக்கன்களை பதிவுத்துறை ஒதுக்கி வருகிறது.. இந்நிலையில், இன்றும், நாளையும் முகூர்த்த தினம் என்பதால், தமிழக பதிவுத்துறை மீண்டும் ஒரு குட்நியூஸ் வெளியிட்டுள்ளது. இது நிலத்தை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சொத்து உள்ளிட்ட பத்திரப்பதிவு விவகாரங்களை மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில், ஆன்லைன் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.. என்றாலும் சொத்துக்களை பதிய வேண்டுமானால் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல வேண்டியிருக்கிறது.

சார் பதிவாளர் அலுவலகங்கள் அனைத்துமே பதிவுத்துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.. நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை, 585 இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சொத்து விற்பனை மட்டுமல்லாது, திருமணப் பதிவு, சங்கங்கள், நிறுவனங்கள் பதிவு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணமும் இந்த அலுவலகங்களில்தான் பதிவாகின்றன..
பிறப்புச் சான்றிதழ்
பத்திரப்பதிவு, பிறப்புச்சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பதிவு, மற்றும் சங்கங்கள் பதிவு போன்ற பணிகள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் என அனைத்து விதமான நில விவகாரங்கள், சொத்து விவகாரங்களுக்கு, சார் பதிவாளர் அலுவலகம்தான் செல்ல வேண்டியிருக்கிறது..
மேற்கண்ட விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் அணுகும்போது, அவர்களை நேரடியாகவே சார் - பதிவாளர்கள் சந்திக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அதேபோல, சார் - பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்வினை, நேரடியாகவே அறிந்து கொள்ள, வீடி மூலம் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன..
சுபமுகூர்த்த நாட்கள்
இதனைத்தவிர, சுபமுகூர்த்த நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், மக்களும் மகிழ்ச்சியும் திருப்பமும் அடைகிறார்கள்.. அந்தவகையில், இன்றும் நாளையும் முகூர்த்த தினங்களாகும்.. அதனால், இந்த நாட்களில், பத்திரப்பதிவு செய்ய கூடுதல் டோக்கன்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை கிளம்பியது..
இதையடுத்து, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிரடி அறிவிப்பு
இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில், "சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்படும்.
அதோடு அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications