ஆட்டோ டிரைவரின் ஆசன வாயில் பைப்பால் தாக்குதல்? சிறுநீரை குடிக்க வைத்த ஆர்.கே.நகர் போலீஸ்?
சென்னை: சென்னையில் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவரை கொடூரமாக தாக்கி அவருடைய ஆசன வாயில் பைப்பை வைத்து தாக்கியதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் அந்த கைதியை சிறுநீரை குடிக்க வைத்தும் கொடூரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனது மகனை மீண்டும் கைது செய்து கண்ணில் கூட காட்டாமல் வைத்திருப்பதாக குற்றம்சாட்டிய ஆட்டோ டிரைவரின் தாய், தனது உறவினர்களுடன் காவல் நிலையத்தில் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
வடசென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் மோகன். இவர் நேற்று இரவு தனது வீட்டு வாசலில் நின்றிருந்த போது அங்கு சக ஆட்டோ ஓட்டுநரான யுவராஜ் என்பவர் தனது காதலியுடன் வந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கிருந்த காதலி யுவராஜை தடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் பீர் பாட்டிலை எடுத்து மோகனை, யுவராஜ் தாக்கிய சம்பவமும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் தகவலறிந்த ஆர்.கே.நகர் போலீஸார், மோகனையும் யுவராஜையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீஸாரிடம் என்னை ஏன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள் என மோகன் வாக்குவாதம் செய்தததாக தெரிகிறது. எனவே யுவராஜிடம் ஒரு புகார் மனுவை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பிய போலீஸார் எதிர்த்து பேசிய மோகனை போலீஸார் கொடூரமாக தாக்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து மோகனின் தாய் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: என் மகன் மோகன், போலீஸாரை தரக்குறைவாக பேசியதாக சொல்கிறார்கள். அவர் அப்படி பேசினாரா என தெரியவில்லை. இரவு 12.30 மணிக்கு என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். என்னிடம் வரும் போது என் மகன் கூறுகையில் "என்னை ஆசன வாயில் பைப்பை வைத்து தாக்கி ரத்தம் வரவழைத்துவிட்டனர்.
அது போல் சிறுநீர் கழிக்கும் இடங்களிலும் அடித்துவிட்டனர். அடி தாங்க முடியாததால் தண்ணீர் கேட்ட போது சிறுநீரை குடிக்க வைத்தனர். தண்ணீர் வாங்கி கொடு" என கேட்டு தன்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து போக சொன்னான். நான் அங்கு சென்று மருத்துவமனையில் அனுமதித்த போது, இந்த தகவல் போலீஸாருக்கு தெரிந்து என் மகனை தீவிரவாதியை பிடிப்பது போல் 20 போலீஸார் வந்து கைது செய்தனர்.
மருத்துவரிடம் என் மகனை, கைதி தப்பி விட்டதாகவே போலீஸார் கூறி புறநோயாளிக்கானசீட்டை கிழித்துவிட்டனர். தற்போது வரை என் மகனை என் கண்ணில் காட்டவில்லை. என்னிடம் ஆதார் கார்டு கேட்கிறார்கள். இந்த சம்பவம் மற்றொரு சாத்தான்குளத்தை நினைவுப்படுத்துவதாக அந்த தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications