வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு.. தானாகவே தீப்பிடிக்கும் வண்டிகள்.. இதை மட்டும் செய்யாதீங்க: தமிழக அரசு
சென்னை: வாகனங்கள் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்து விடும்நிலையில், தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.
அரசின் போக்குவரத்து ஆணையம் சார்பில் சில அறிவுரைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு இதுதான்:

"சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.அவ்விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் மாறுதல் செய்யப்படுகையில் அங்கீகரிக்கப்படாத சி. என். ஜி , எல் .பி .ஜி (CNG/LPG ) மாற்றங்கள், அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களாளால் மாற்றம் செய்யப்பட்ட, வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகின்றன.
அறிவுறுத்தல்: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்டம் (மற்றும்) விதிகளின்படி குற்றமாகும்.. எனவே வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம்" என அறிவுறுத்தியிருக்கிறது.
நாளுக்கு நாள் வாகனங்கள் தீபற்றி எரிவது பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.. இதற்கு என்ன காரணம்? தமிழக நம்முடைய இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... மோட்டார் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
மற்றொருபக்கம் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் எகிறி கொண்டே வருகிறது.. அதனால்தான், இதனை சமாளிக்க, தங்கள் வாகனங்களை கேஸ் மூலம் இயக்க முயற்சி செய்கின்றனர்.
கேஸ் சிலிண்டர்: இப்படி காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட 4 சக்கர வாகனம் மற்றும் 3 சக்கர வாகனங்கள் அதிக மைலேஜ் கொடுப்பதுடன், அதற்கான செலவும் குறைந்த அளவே உள்ளது... ஆனால், இதுபோன்ற காஸ் சிலிண்டர் பொருத்தி இயக்கப்படும் வாகனங்கள்தான் பீதியை தந்து கொண்டிருக்கின்றன.
வாகனங்களில் சென்று கொண்டிருந்தாலோ அல்லது நிறுத்தி வைக்கும்போதோ, திடீர் திடீரென தீப்பற்றி எரிந்துவிடுகின்றன.. இதற்கெல்லாம் காரணம், உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவதுதான் என்கிறார்கள்..
அட்வைஸ்: காஸ் மூலம் வாகனங்கள் இயக்கப்படுவதுன், என்ஜின் கூலிங், ஆயில் கூலிங் என்றெல்லாம் தொழிற்நுட்ப கருவிகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.. எனவே, வாகனத்தில் என்ஜின், கியர்பாக்ஸ் என முக்கிய பாகங்கள் ரிப்பேர் ஆகிவிட்டால், அனுபவமிக்க சர்வீஸ் செண்டர்களை அணுகுவதுதான் நல்லது என்கிறார்கள்.. இதைதான் நம்முடைய தமிழ்நாடு அரசும் பரிந்துரைக்கிறது.












Click it and Unblock the Notifications