24 மணி நேரத்தில் இனி போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்.. ஆன்லைனிலேயே பிரேத பரிசோதனை அறிக்கை.. அரசு அதிரடி
சென்னை: பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. போலீசாரும், கோர்ட்டும் மட்டும் இந்த பிரேத பரிசோதனை பதிவிறக்கம் செய்ய அனுமதி பெறுவார்கள்.. போஸ்ட் மார்ட்டம் அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து வருவதாக மருத்துவத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணம், கொலை போன்றவை காரணமாக மரணமடைபவர்களின் சடலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.. அங்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, அதன்பிறகே சம்பந்தப்பட்டவர்களின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
ஆனால், இதுபோன்ற சந்தேக மரணங்களில் இறந்தவர்களின் போஸ்ட் மார்ட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படுகிறது.. 24 மணி நேரத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் தயாராகிவிட்டது என்று அரசு மருத்துவமனைகள் தரப்பில் சொன்னாலும், அதை அதற்குரிய மருத்துவர்கள் ஆய்வு செய்வது, கையெழுத்து போடுவது போன்ற நடைமுறைகளால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்கள் கிடைப்பதில் தாமதமாகிறது...
இதைத்தவிர இந்த ரிப்போர்ட்டை நேரில் சென்று வாங்குதால் போலீசாரும் தாமதிப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. எனவேதான், இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கும் வகையில், தமிழக அரசு புதிய வசதியை கொண்டுவந்துள்ளது..
அதன்படி இனிமேல் உடற்கூறாய்வு அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் உடனே இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் டவுன்லோடு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
தாமதம், ஊழல், சட்டவிரோத செயல்
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிரேத பரிசோதனை அறிக்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.. இதன்மூலம், தாமதம், ஊழல், சட்டவிரோத செயல்கள் என அனைத்தும் தவிர்க்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது..
போஸ்ட் மார்ட்டம் அறிக்கையை ஆன்லைனில் டவுன்லோடு செய்யும் பணிகள் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சோதனை முறையில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, ஊழியர்களும் பிரத்யேகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனராம்.
24 மணி நேரத்தில் ரிப்போர்ட்
விரைவில் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யும் வசதி பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இதன்மூலம் 24 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கப்படும். இந்த அறிக்கையை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்...
பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. ஒருவேளை பிரேத பரிசோதனை அறிக்கை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவைப்பட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கே நேரடியாக சென்று தங்கள் சான்றிதழ்களை காண்பித்து அறிக்கையை பெற்றுக்கொள்ளலாம்.
புதிய நடைமுறை
அதேபோல, போலீசாரே நேரில் வந்து போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை வாங்கும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும் என தெரிகிறது.
ஊழல் மற்றும் தாமதத்தை தவிர்க்க ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதை அமல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை 24 மணி நேரத்துக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பித்திருப்பது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
தமிழகத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போட்டை வைத்தே எந்தவொரு விசாரணையும் நடத்தப்பட்டு வரும்நிலையில், இந்த உத்தரவு காவல்துறை பணிகளுக்கும் எளிதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications