சென்னை மக்களே கவனம்.. மார்ச் 19ல் ஆட்டோக்கள் ஓடாது.. தமிழக அரசு - போலீசுக்கு எதிர்ப்பு
சென்னை: சென்னையில் வரும் 19ம் தேதி ஆட்டோக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. ஆட்டோக்களில் க்யூஆர் கோட் ஸ்டிக்கரை காவல்துறை ஒட்டுவதை கைவிட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்கூட்டியே பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வது நல்லது.
சென்னையில் ஏராளமான ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. பைக் டாக்ஸி, வாடகை கார் சேவைகள் வந்ததில் இருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசு சார்பில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மாநிலம் முழுவதும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இப்படியான சூழலில் தான் சென்னையில் வரு சென்னையில் வரும் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது. அன்றைய தினம் சென்னையில் ஆட்டோக்கள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் என்பது தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து நடைபெற உள்ளது. மொத்தம் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி
வேலைநிறுத்தம் நடக்கிறது. அதன்படி ஆட்டோக்களில் QR Code ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது. பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் அபராதத்தில் இருந்து ஆட்டோவுக்கு விலக்கு கொடுக்க வேண்டும். 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகரித்து கொடுக்க வேண்டும். அரசின் ஆட்டோ செயலியை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற 5 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிதான் சென்னையில் மார்ச் 19ம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள் என்பது ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு சிஐடியூ, ஏஐடியூசி, எச்எம்எஸ், எம்எல்எஃப், எல்எல்எஃப், எஸ்டிடியூ உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அன்றைய தினம் சென்னையில் ஆட்டோ சவாரி என்பது பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்டோக்களை நம்பி இருப்போர் முன்கூட்டியே மாற்று ஏற்பாட்டை செய்து கொள்வது நல்லது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications