உள்ளே அழுகிறேன்! வெளியே சிரிக்கிறேன்! மனம் உடைந்து போன நாசர்! சீனியர் அமைச்சர்கள் தரும் நம்பிக்கை!
சென்னை: அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நாசர் மனம் உடைந்த நிலையில் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்து வருகிறாராம்.
அமைச்சர் பதவியிலிருந்து ஸ்டாலின் தன்னை நீக்குவார் என சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியான போது கூட அதை நாசர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள வில்லையாம்.
ஸ்டாலின் மீது அப்படியொரு நம்பிக்கை வைத்திருந்த நாசருக்கு நேற்று நடந்த நிகழ்வு தூக்கத்தை தொலைக்க வைத்திருக்கிறது.
என் சோகம் என்னோடு தான் என்பதற்கேற்ப மனதுக்குள் கவலையும், அழுகையும் வந்தாலும் தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்கள், பிரமுகர்கள் மத்தியில் நாசர் சிரித்து பேசி அனுப்பி வைக்கிறாராம்.

தன்னை பொறுத்தவரை அமைச்சர் பதவி போனால் என்ன, கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி இருக்கிறதே அது போதும் என பெருமையாக கருதும் நாசர், அடுத்த மூன்றாண்டுகளில் மீண்டும் முதல்வர் தனக்கொரு வாய்ப்பு தருவார் என நம்புகிறாராம்.
ஏனெனில் ஸ்டாலினுக்கும் நாசருக்கும் இடையேயான நட்பு என்பது இன்று நேற்றல்ல ஏறத்தாழ 30 ஆண்டுகால நட்பு என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞரணி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஸ்டாலினுடன் தமிழ்நாடு முழுவதும் பயணித்த மூன்று பேரில் நாசரும் ஒருவர்.
அந்தளவுக்கு திமுகவில் படிப்படியாக முன்னேறி அமைச்சரானவர் நாசர். அவருக்கு இருக்கும் பெரிய மைனஸ் என்று பார்த்தால் முன் கோபம். இந்த முன் கோபத்தால் தான் இன்று அமைச்சர் பதவியை இழக்க வேண்டிய நிலை அவருக்கு வந்துள்ளது.
இதனிடையே சீனியர் அமைச்சர்கள் பலரும் நாசரை நேற்றிரவு முதல் தொடர்பு கொண்டு பேசி நம்பிக்கை அளித்து வருகிறார்களாம். இதுவும் கடந்து போகும் என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொள்ளும் நாசர், ஆதரவாளர்களை சமாதானம் செய்ய முடியாமல் தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு











Click it and Unblock the Notifications