Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கையை கட்டி.. வெள்ளை சட்டை போட்டா ஏவிஎம் சரவணன் ஆக முடியுமா? மறைந்த திரை ஆளும்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக தனது 86 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு இந்தியா முழுவதிலுமிருக்கும் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் திரையுலகின் பாதையை தீர்மானித்ததில் ஏவிஎம் நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ? அந்த அளவு ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானத்தில் சரவணனின் பங்கு அளப்பரியது என புகழாரம் சூட்டியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். மேலும், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலியும் செலுத்தினார்.

தமிழ் தொடங்கி பாலிவுட் வரை பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோஸ். ஏவி மெய்யப்ப செட்டியார் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், பின்னர் கமல், ரஜினி என பல நட்சத்திரங்களை வைத்து நூற்றுக்கணக்கான படங்களை தயாரித்தது.

கடைசியாக ரஜினிகாந்த் நடித்திருந்த சிவாஜி படத்தை ஏவிஎம் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. தமிழ் திரையுலகில் புதிய வசூல் சாதனையை அந்த படம் படைத்தது குறிப்பிடத்தக்கது. மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை அவரது மகனான ஏவிஎம் சரவணன் கவனித்து வந்தார்.

AVM Saravanan mk Stalin cinema

ஏவிஎம் சரவணன்

சொல்லப்போனால் இவரது காலத்தில் தான் ஏவிஎம் நிறுவனம் பிரம்மாண்ட படங்களை தயாரிக்க தொடங்கியது. அதற்கு உதாரணம் தான் சிவாஜி. தன்னடக்கத்துக்கு அடையாளமாக ஏவிஎம் சரவணன் தான் சொல்வார்கள். பெரும் பணம், புகழ் என இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் கைகளை கட்டிக்கொண்டு தான் பேசுவார். இதை வைத்து திரைப்படங்களில் கூட நிறைய காட்சிகள் வந்திருக்கிறது. கை கட்டியவர் எல்லாம்.. வெள்ளை உடை போட்டவர் எல்லாம் சரவணன் ஆகி விட முடியுமா என்று கூட சொல்வார்கள்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

அந்த அளவுக்கு திரையுலகினர் அரசியல் கட்சித் தலைவர்களிடையே நன்மதிப்பை பெற்றவர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஏ வி எம் சரவணன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு காலமானார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு மொழி திரை ஆளுமைகளும் அரசியல் தலைவர்களும் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானித்ததில் சரவணனின் பங்கு அளப்பரியது என புகழாரம் சூட்டியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

AVM நிறுவனம்

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ - அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.

கலைஞரின் "பராசக்தி"

புதல்வராகவும் - திரைத்துறை ஆளுமையாகவும் "அப்பச்சி" என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம். அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன் அவர்கள். பேரறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு", தலைவர் கலைஞரின் "பராசக்தி", முரசொலி மாறன் அவர்களது "குலதெய்வம்" என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன் அவர்கள்.

ஏவிஎம் நிறுவனம்

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+