உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம்! விசாரணைக்கு அழைத்தால் தமிழகம் வருவேன் -அயோத்தி சாமியார்
சென்னை: சனாதனம் குறித்த தனது பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம் என அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியா தெரிவித்துள்ளார்.
பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைக் கூறியுள்ளார். தன் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது தெரியும் என்றும் இதனால் விசாரணைக்கு அழைக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு நிச்சயம் தாம் வருவேன் எனவும் அயோத்தி சாமியார் கூறியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்ததாகவும் அவ்வாறு அவர் செய்யாததால் தான் அவரது தலைக்கு தாம் ரூ.10 கோடி விலை நிர்ணயம் செய்ததாகவும் காரணம் தெரிவித்துள்ளார். சனாதனம் குறித்த கருத்தை உதயநிதி ஸ்டாலின் வாபஸ் பெற்றால் தனது எச்சரிக்கையை தாமும் வாபஸ் பெற்றுக் கொள்வேன் எனக் கூறியிருக்கிறார்.
தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும் வரை உதயநிதி ஸ்டாலினை விடமாட்டோம் எனக் கூறியுள்ள அயோத்தி சாமியார், துறவியாக இருக்கும் உங்களுக்கு இவ்வளவு கோபம் எதற்கு என்ற கேள்விக்கு தனது மனதில் உதயநிதி மீது இன்னும் தயவு உள்ளதாக தெரிவித்தார்.
சனாதனம் மீது நம்பிக்கை இல்லை என்றால் உதயநிதி வேறு மதத்திற்கு சென்றுவிடலாம் என்றும் விமர்சித்துள்ளார். அயோத்தி சாமியார் இது போன்று கூறிக்கொண்டிருக்கும் இதே வேளையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சனாதனம் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் 120 கோடி மக்கள் சனாதனம் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியுள்ள அந்த சாமியார், சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசுவது அதனை மதிக்கும் 80% மக்களையும் ஒழிப்பேன் என்று கூறுவதாகவே அர்த்தம் எனத் தெரிவித்துள்ளார்.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications