அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. சீதைக்கு சென்னை அனகாபுதூரிலிருந்து தயாராகும் வாழை நார் சேலை
சென்னை: அனகாபுதூர் இயற்கை நார் நெசவு குழுமம் சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்கு 20 அடி நீளத்தில் வாழை நார் புடவை பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் இயற்கை நார் நெசவு குழுமம் உள்ளது. இவர்கள் வாழை, கற்றாழை, அன்னாசி, மூங்கில் உள்ளிட்ட இயற்கை நார்களைக் கொண்டு புடவை, கைப்பை, பேன்ட், சட்டை ஆகியவற்றை தயார் செய்கிறார்கள்.

இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் வழியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வரும் 22 ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வாழை நாரில் புடவை தயார் செய்து அனுப்பப்படுகிறது.
இதற்காக 10 நாட்களாக தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் நெய்து வருகிறார்கள். இந்த புடவை 4 அடி அகலம் 20 அடி நீளம் கொண்டது. தமிழ்நாடு வாழை உற்பத்தி சங்கம் மூலம் ராமர் கோயிலுக்கு அனுப்பியுள்ளனர். இந்த புடவை சீதாதேவிக்கு சாத்தப்படும் என தெரிகிறது.
25 இயற்கை நார்களை கொண்டு பல ஆண்டுகளாக புடவைகளை மேற்கண்ட குழுமத்தினர் தயாரித்து வருகிறார். சென்னை அனகாபுத்தூரில் நார்களை கொண்டு சேலையை வடிவமைக்கும் சேகர் என்பவர் இயற்கையான டைகளை கொண்டு தயாரிக்கிறார். மஞ்சள், இன்டிகோ ஆகியவற்றில் டை பயன்படுத்துகிறார்கள்.
5000 கைத்தறிகள் உள்ளன. ஒவ்வொரு வீடுகளிலும் 5 முதல் 10 வரை கைத்தறிகள் உள்ளன. பாரம்பரியமாக நெசவு தொழில் செய்வோர் தொழில் நலிவடைந்ததால் அதை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டார்கள். எனினும் புதுமையை புகுத்த சேகர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் விரும்பி நார்களை கொண்டு புடவை தயாரிக்கிறார்கள்.
ஒரு புடவையை இரு தொழிலாளர்கள் நெய்ய இரு நாட்களும் ஒரே ஒரு தொழிலாளர் நெய்ய 4 முதல் 5 நாட்களும் தேவைப்படும். ஒவ்வொரு புடவையும் ரூ 1800 முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
வரும் 22 ஆம் தேதி அன்று கோயில் கருவறையில் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவுக்கு 8 ஆயிரம் பேர் அழைக்கப்படுகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications