Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அயோத்தி வழக்கை உதாரணம் காட்டிய நீதிபதி சுவாமிநாதன்.. தமிழக அரசு வைத்த.. வலுவான பதில் வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் வழக்கில் ராமஜென்ம பூமி வழக்கின் நிலையை தனி நீதிபதி சுவாமிநாதன் மேற்கோள் காட்டியுள்ளார். அது இவ்வழக்கில் பின்பற்றப்பட்டால், இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தையே நாட உத்தரவிட்டிருக்க வேண்டும், என்று தமிழக அரசு தரப்பினர் இன்று உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை இன்று இருநீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு வந்தது. அனைத்து மேல்முறையீடுகளும் நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளன.

Thirupparankundram bjp

அப்போது தமிழக அரசு சார்பில் கோவில் அருகே தர்கா உள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் தான் அனுமதி வழங்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.

தமிழக அரசு வாதம்:

தமிழக அரசு வைத்த வாதத்தில், தனி நீதிபதியின் உத்தரவில் கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த பதில் அறிக்கையை கருத்தில் கொள்ளவே இல்லை; மரபு விதிகளை கடைபிடித்து கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றியுள்ளது வழிபாட்டுத்தலங்கள் 1947 ஆகஸ்டுக்குப் பிறகு எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலைதான் தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பொருந்தாது என தனி நீதிபதி கூறியுள்ளார்

மிக மிக முக்கியமான ஒரு விவகாரத்தில் 3 நாட்களில் எப்படி முடிவு எடுக்க முடியும்? அமைதியும், பாதுகாப்பும் கருத்தில் கொள்ள வேண்டும் மலை உச்சியில் உள்ளது தீபம் ஏற்றக்கூடிய தூண்தான் என உறுதி செய்யாமல் பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

மதுரை திருப்பரங்குன்ற கோயிலில் கார்த்திகை தீபம் பண்டிகையின்போது, விளக்கேற்றும் உரிமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. 500 அடி குன்றடிவாரத்தில் அமையப்பெற்றுள்ள இக்கோயிலுக்கு அருகிலேயே ஒரு தர்காவும் உள்ளது. பாரம்பரியமாக உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ராம ரவிக்குமார், கோயில் நிர்வாகம் அல்லது தானே, தர்காவிற்கு அருகிலுள்ள 'தீபத்தூண்' என்ற இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி கோரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவாதத்தின் மையப்புள்ளி, 'தீபத்தூண்' எனப்படும் அமைப்பின் இருப்புதான். அரசு வழக்கறிஞரின் கூற்றுப்படி, 1920-ல் நடந்த முதல் வழக்கில் இந்த 'தீபத்தூண்' குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. மனுதாரர்கள் அப்போதெல்லாம் தீபத்தூண் என்று குறிப்பிடவே இல்லை. எனவே, அந்தத் தூணில் தீபம் ஏற்றுவது வழக்கமான நடைமுறையாக இருந்தது என மனுதாரர்கள் நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் நிரூபிக்கப்படவில்லை, என்று வாதம் வைத்தனர்.

நீதிபதிகள் கேள்வி:

இதற்கு நீதிபதிகள் எழுப்பிய கேள்வியில், 1920ம் ஆண்டு முதல் இதுபோன்ற பிரச்னைகள் தொடர்கின்றன; இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். தீபம் அனைவருக்கும் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக, அந்த கோரிக்கை வைக்கப்பட்டால் அதை ஏன் செய்யக் கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு வாதம்:

தமிழக அரசு இதற்கு அளித்த பதிலில், மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகிதான் தீபம் ஏற்றுவது குறித்து உத்தரவு பெற முடியும்; இதைத்தான் நீதிபதி கனகராஜ் வழங்கிய தீர்ப்பிலும் குறிப்பிட்டுள்ளார் . எனினும், இந்த கோரிக்கையோ, வாதமோ இப்போது வைக்கப்படவில்லை. ராமஜென்ம பூமி வழக்கின் நிலையை தனி நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார். அது இவ்வழக்கில் பின்பற்றப்பட்டால், இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தையே நாட உத்தரவிட்டிருக்க வேண்டும், என்று வாதம் வைத்தனர்.

கோவில் தரப்பு வாதம்:

இதையடுத்து, மலையில் தீபம் ஏற்ற தனி நபர்களுக்கு உரிமையே இல்லை; கோயில் நிர்வாகத்தின் உரிமைக்கு உட்பட்டது. நீதிமன்றம் தனி நபர்களுக்கு உரிமையை வழங்கும் போது, ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இவைகள் கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகளை கடினமாக்கும், என்று கோவில் தரப்பு அரசுக்கு ஆதரவாக வாதம் வைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+