ராமர் கோவிலைச் சுற்றியுள்ள நிலங்களின் விலை 900% உயரும்! ஜெட் வேகத்தில் அயோத்தி ரியல் எஸ்டேட்!
சென்னை: ராமர் கோயில் திறக்கப்பட்டதை அடுத்து அயோத்தியில் ரியல் எஸ்டேட் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.
கடந்த 22 ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி. அந்தக் கோயிலைத் திறப்பது என்பது பாஜகவின் கொள்கைத் திட்டங்களில் ஒன்றாக இருந்துவந்தது.

மொத்தம் 70 ஏக்கர் பரப்பில் உள்ள நிலத்தில் சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவுக்கான இடத்தில் மட்டும் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் 161 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
கிட்டத்தட்ட ரூ 1,800 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இது இந்தியாவில் சமீப காலங்களில் கட்டப்பட்டுள்ள மிக விலையுயர்ந்த கோயிலாகும். ஆகவே, இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள நிலங்கள் மீது வியாபாரிகளின் கண் பார்வையில் விழத் தொடங்கி உள்ளது.

பல கட்டுமான நிறுவனங்கள் இந்தக் கோயிலைச் சுற்றி உள்ள நிலங்களில் முதலீடு செய்யப் போட்டிப் போட்டுக் கொண்டுள்ளனர். எனவே அயோத்தியில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய இது சரியான நேரமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆங்கில ஊடகங்களில் வெளியாகி உள்ள பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூற்றுப்படி சில தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அது என்னவென்றால், அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலங்களின் விலைவாசி நிச்சயம் உயர்ந்துள்ளன.
அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அது எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்றால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசியை விட 5 முதல் 10 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது என ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது.

அதில் இன்னும் வியப்பு என்னவென்றால், இந்த விலை உயர்வு ஆரம்பம் மட்டும் தானாம். அதாவது நம்ம ஊர் பாஷையில் சொன்னால் ட்ரெய்லர்தான். மெயின் பிக்சர் இனிமேல்தான் வரப் போகிறது என்கிறார்கள் நில முதலீட்டாளர்கள்.
அதாவது ராமர் கோயில் திறப்பு விழா மட்டுமே முடிந்துள்ளது. இது இன்னும் பக்தர்களின் தேவைக்காக முழுமையாகத் திறந்துவிடப்படவில்லை. அப்படித் திறக்கப்படும் நாளில் நாடு முழுவதும் இருந்து யாத்திரிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து குவியத் தொடங்கிவிடுவார்கள்.

அப்படி இந்தப் புனித நகரத்தை நோக்கி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயரும் காலத்தில், இப்பகுதியில் உள்ள நிலங்களில் விலை விண்ணை எட்டும் அளவுக்கு உயர்ந்துவிடும் என்கிறார்கள். ஏனெனில் அடுத்த சில ஆண்டுகளில் இந்த நகரத்தில் பல டவுன்ஷிப்கள் உருவாக்கப்பட்ட உள்ளன. கூடவே தனியார் ஹோட்டல்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
"அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகரம் வளர்ச்சியடைய உள்ளது. அதற்காகப் பொருளாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன" என்கிறார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கும் பேட்டி அளித்துள்ள கோலியர்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூத்த இயக்குநர் விமல் நாடார்.
"இங்குள்ள விமான நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. சர்வதேச நிலையமாக அது அமைக்கப்பட்டுள்ளது. சாலைகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் உட்பட, அயோத்தியை விருப்பமான மத சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்" என்கிறார் விமல்.

ராமர் கோயில் மூலம் அயோத்தியில் மிகப்பெரிய பொருளாதார மாற்றம் ஏற்படப்போகிறது. தங்கும் விடுதிகள், பூங்காக்கள் வர உள்ளன. இதனால் வணிக பெருக்கம் அடைவதற்கான பல்வேறு கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
எனவே, "இந்த நகரத்தின் உருமாற்றமானது, வீடு, வணிகம், சில்லறை விற்பனை, ரியல் எஸ்டேட் வியாபாரம் உட்பட அனைத்திலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்கிறார் நாடார்.

"அயோத்தி உள்ள ராமர் கோயில் முழுமையாக இயங்க ஆரம்பிக்கும் போது குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துகளின் தேவை பல மடங்கு அதிகரிக்கும்" என்கிறார் ஹிராநந்தனி குழுமத்தின் எம்.டி. நிரஞ்சன் ஹிரானந்தானி.
அயோத்தி ரியல் எஸ்டேட்: எவ்வளவு வருமானத்தை எதிர்பார்க்கலாம்?
நீங்கள் இப்போது அயோத்தியில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டால், எவ்வளவு வருமானத்தை எதிர்பார்க்கலாம்? என்பது மிகமிக முக்கியமான கேள்வி.

இது குறித்து இந்தத் துறையில் அனுபவம் பெற்ற ரவி நிர்வால் கூறுகையில், "ராமர் கோயிலுக்கான நிலம் பங்கு பிரிக்கப்பட்டதிலிருந்து அயோத்தியில் உள்ள சொத்துகளின் விலை 5 முதல் 10 மடங்கு உயர்ந்துள்ளது.
சொத்து கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் நிலம் மற்றும் சொத்துக்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கோவில் இருக்கும் இடத்திலிருந்து 5 முதல் 10 கி.மீ.க்குள் ஒரு சதுர அடிக்குக் கிட்டத்தட்ட 20,000 ரூபாய் அளவுக்கு மார்க்கெட் விலை உள்ளது" என்கிறார்

கோவிலுக்கு அருகில் உள்ள சொத்துக்களின் விலை சதுர அடிக்கு ரூ.2,000 முதல் ரூ.18,000 வரை இருக்கும் என்கிறார் த்ரிதாட்டு ரியாலிட்டி சொத்தின் இயக்குநர் சிவுக்குலா. அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்த விலையானது மேல்நோக்கி உயரும் என்றும் அவர் மதிப்பிடுகிறார்.
ஆக, வருங்காலங்களில் ராமர் கோவிலைச் சுற்றியுள்ள நிலங்களின் விலை, 900% உயரக்கூடும் என ரியல் எஸ்டேட் பெரும் புள்ளிகள் கணித்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications