பட்டாபிஷேக ராமர் படம்.. ஸ்வத்திக் சின்னம்.. ராமரின் ஆசி கிடைக்க வீட்டு பூஜை அறையில் இதை செய்யுங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இந்த தருணத்தில் நமது வீட்டின் பூஜை அறையிலும் விளக்கேற்றி ஸ்வத்திக் சின்னம் வரைந்து ராமர் பட்டாபிஷேகம் படம் வைத்து ராம நாமத்தை சொல்லி வணங்கினால் அந்த ராமரின் அருளும் அனுமனின் அருளும் ஒன்றாக கிடைக்கும்.

எல்லா சாலைகளும் அயோத்தியை நோக்கி என்று சொல்வது போல ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை வைபவத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாடு முழுவதும் ராம நாமம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் அயோத்தியில் திரண்டுள்ளனர். பல கோடி மக்கள் தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Ayodhya ram temple inauguration: Do this in your home puja room to get blessings of Lord Rama

அயோத்திக்கு செல்ல முடியவில்லையே என்று பலருக்கும் ஏக்கம் இருக்கும். அயோத்தியில் மட்டுமல்ல நம்முடைய வீட்டிலும் குழந்தை ராமரை எழுந்தருள செய்யலாம். அதற்கு நம்முடைய மனத்தூய்மையும், உடல் தூய்மையும் முக்கியம். குளித்து சுத்தமாக நாம் பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்ற வேண்டும். இன்றைய தினம் நாம் சுத்தமான வெண்மை நிற ஆடைகளையும், காவி, இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணியலாம்.

பூஜை அறையில் சீதா ராமர் லட்சுமணர் சிலை இருப்பது நல்லது. அதற்கு அபிஷேகம் செய்யலாம். சிலை இல்லாதவர்கள் பட்டாபிஷேக ராமர் படத்தை வாங்கி வைக்கலாம். அந்த படத்தை நறுமணம் மிக்க மலர்களால் அலங்கரிக்க வேண்டும். இது நம்முடைய வீட்டை நறுமணம் உள்ளதாக மாற்றும்.

பூஜை அறையில் அழகான கோலமிட்டு அதில் மஞ்சள் குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும். ஸ்வத்திக் சின்னத்தை வரையவும். ஓம் என்ற மந்திரத்தையும் எழுதலாம். இது உங்கள் பூஜை அறையை மேலும் புனிதமானதாக மாறும். பூஜை அறையில் காவி நிற அல்லது சிவப்பு நிற துணியை விரித்து அதில் கலசம் வைத்து பச்சரிசியால் நிரப்பவும்.

சந்தனம், குங்குமம் வைத்து கலசத்தை அலங்கரிக்கவும். பின்னர், அதற்கு மேலே தேங்காயை வைக்கவும். மேலும் சில பழங்களை அங்கே வைக்கலாம். பூக்கள், பழங்களையும் கலசத்தின் அருகே வைக்கவும். வீட்டில் குத்துவிளக்கு, அகல் விளக்கு ஏற்றி உங்கள் பூஜையை ஆரம்பிக்கலாம். "ஓம் ராம் ராமாய நம" என்ற ராம மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். அட்டசதையும் அவசியம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் ராம மந்திரத்தை உச்சரிக்கும் போது ராமரை உங்கள் கண் முன்னே உருவகப்படுத்திக்கொள்ளுங்கள். கடவுள் ராமர் உங்கள் வீட்டில் எழுந்தருளுவது போல நினைத்துக் கொள்ளுங்கள். அனுமனும் உங்கள் அருகிலேயே அமர்ந்திருப்பார். பூஜை அறையில் நீங்கள் இப்படி பூஜைகளைச் செய்தால் உங்கள் வீடு தெய்வீக அம்சம் நிறைந்ததாக மாறும். கோடி நன்மை கிடைக்கும். ராமரின் அருளும் அனுமனின் அருளும் நிச்சயம் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+