ஆயுதபூஜை விடுமுறை.. தூத்துக்குடி, நாகர்கோவில் போறவங்களுக்கு குட் நியூஸ்
சென்னை: ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. பொதுவாக எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக, சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அங்கு தனது உற்றார் உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

குடும்பத்துடன் செல்வதால் ரயிலில் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணம் செய்ய திட்டமிடுவார்கள். ஏனெனில் கடைசி நேரத்தில் ரயில், பேருந்துகளில் பயணம் செய்ய நினைத்தால் படாத பாடு படவேண்டியிருக்கும். பேருந்துகள், ரயில் நிலையங்களில் நிற்க கூட முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் பயணிகள் கூட்டமாகவே இருக்கும். இதனை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வார விடுமுறையையொட்டி வருவதால் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால், அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து அக்டோபர் 8 ஆம் தேதி புறப்பட்டு, தஞ்சை, தேவக்கோட்டை, கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
அதேபோல, கோவை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் அக்டோபர் 6 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று, நாளை ரேனிக்குண்டாவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னையில் பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு ரேனிகுண்டாவுக்கு ரயில் சென்றடையும். ரேனிகுண்டாவில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications