மத்திய அரசு தரும் ஆயுஷ்மான் அட்டை.. மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய்.. எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: எல்லாருக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் எளிமையாகவும் இலவசமாகவும் கிடைக்க வேண்டும் என்பதின் ஒரு பகுதியாக, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ரூ .5 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அறிமுகம் செய்த ஆயுஷ்மான் திட்டத்தின் செயல்முறையை மத்திய அரசு எளிமைப்படுத்தி உள்ளது. ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜான் அக்யா யோஜனா (AB PM-JAY) இன் ஒரு பகுதியாக, ஆயுஷ்மான் வே வந்தனா அட்டையை இப்போது ஆயுஷ்மான் ஆப் (Ayushman App) நேரடியாக பெற முடியும்.
ஆயுஷ்மான் அட்டை என்றால் என்ன?
ஆயுஷ்மான் வா வந்தனா அட்டை முதன்மை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு சுகாதார அடையாள அட்டையாகும். இந்தியா முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரை விரிவான இலவச சிகிச்சையை வழங்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த 2018 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். சுமார் 55 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு காப்பீடு தர வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் ஒரு கட்டமாக 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும், அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், சுகாதார காப்பீட்டை விரிவாக்கம் செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். இந்த திட்டம் காரணமாக 6 கோடி மூத்த குடிமக்கள் உட்பட, சுமார் 4.5 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று மத்திய அரசு அப்போது கூறியிருந்தது. இந்த திட்டம் நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கிறது. ஏழை எளிய மக்கள் இத்திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் மத்திய சுகாராத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இப்போது ஆயுஷ்மேன் வந்தனா அட்டையை ஆயுஷ்மான் ஆப்பின் மூலமே எளிதாக பெறலாம் என்றும், ரூ.5 லட்சம் இலவச சிகிச்சையை அணுகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆயுஷ்மான் வந்தனா அட்டையை எவ்வாறு உருவாக்குவது மற்றும் அத்தியாவசிய சுகாதார வசதிகளை அதன் மூலம் எப்படி அணுகுவது என்பது குறித்தும் வீடியோவில் கூறியுள்ளார்.
ஆயுஷ்மான் அட்டை (ayushman vay vandana card) ஏன் முக்கியமானது
சுகாதார செலவுகள் இன்றைய சூழலில் மூத்த குடிமக்களுக்கு, நல்ல வருமானம் இல்லாத மற்றும் காப்பீடு இல்லாதவர்களுக்கு ஒரு பெரிய சுமையாக இருக்கிறது. இதனால் ஏழை எளிய மக்கள் காப்பீடு பெற முடியாமலும், சரியான சிகிச்சை பெற முடியாமலும் தவிக்கிறார்கள். இவர்கள் ஆயுஷ்மான் ஆப்பில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாலும், அது சாமானிய மக்கள் எளிதாக அணுகும் படியாக இல்லாமல் இருந்தது. தற்போது மத்திய அரசு விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கியுள்ளதுடன், எப்படி ஆயுஷ்மான் வந்தனா அட்டையை பெறலாம் என்பதையும் சிகிச்சைகள் மற்றும் கவரேஜ் குறித்து வீடியோ மூலம் விளக்கி உள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, ஆயுஷ்மான் வந்தனா அட்டையை பெற மொத்தம் 65,97,096 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 64,96,101 ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 96,203 நிலுவையில் உள்ள நிலையில், மொத்தம் 4,792 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களைக் கொண்ட மாநிலங்களில் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கேரளா, குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை முன்னிலையில் உள்ளன.
ஆயுஷ்மான் அட்டைக்கு (ayushman vay vandana card) யார் விண்ணப்பிக்க முடியும்?
வயது 70 அல்லது அதற்கு மேல் எந்த இந்திய குடிமகனும் விண்ணப்பிக்க முடியும்.
ஆதார் அட்டையை வைத்திருக்க வேண்டும்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கையில் இருக்க வேண்டும்.
குறிப்பு: வருமானம் இந்த அட்டையை பெற தடையே இல்லை. நீங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இல்லாதவர்களாக இல்லாவிட்டாலும், 70 அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தாலே விண்ணப்பிக்கலாம்.
ஆயுஷ்மான் அட்டை பெற ( ayushman vay vandana card) என்னென்ன ஆவணங்கள் தேவை
ஆதார் அட்டை (வயது மற்றும் அடையாளத்தின் சான்றாக தேவையாகும்)
ஆதார்-இணைக்கப்பட்ட மொபைல் எண் தேவையாகும்
ஆயுஷ்மான் அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
நீங்கள் ஆயுஷ்மான் அட்டை பெற இரண்டு எளிய வழிகளில் விண்ணப்பிக்கலாம்: மொபைல் ஆப் அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
ஆயுஷ்மான் ஆப் (மொபைல் மூலம்) வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றால், ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்ய வேண்டும். அதில் லாக் இன் செய்ய வேண்டும். பிறகு உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்சாவை உள்ளிட்டு, பின்னர் OTP வழியாக உள்ளே நுழைய வேண்டும். பின்னர் 'Enrollment for 70+' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஆதார் விவரங்களை உள்ளிடவும், E-KYCயை முடிக்க வேண்டும். தேவையான விவரங்களை பூர்த்தி செய்து புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் படிவத்தை சமர்ப்பிக்கவும். உங்கள் ஆயுஷ்மான் அட்டை சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யப்படும்.
ஆயுஷ்மான் அட்டைக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
ஆயுஷ்மான் பாரத் வலைத்தளத்தில் உள்ளே நுழைய வேண்டும். உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்சாவை உள்ளிட்டு, OTP வழியாக உள்நுழைய வேண்டும். அதில் 'Enrollment for Senior Citizens (70+)' என்ற பேனரைக் கிளிக் செய்ய வேண்டும். ஆதார் எண்ணை உள்ளிடவும்-OTP/பயோமெட்ரிக்ஸ் வழியாக E-KYC ஐ முடிக்க வேண்டும். பின்னர் விவரங்களை நிரப்ப வேண்டும். இறுதியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் நேரடியாக புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். இறுதியாக படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து உங்கள் ஆயுஷ்மான் அட்டை 15-20 நிமிடங்களில் பதிவிறக்கம் செய்ய தயாராக இருக்கும்.
14555
1800-11-0770
இந்தியா முழுவதும் 24 மணி நேரமும் விண்ணப்பிக்க முடியும்.
Senior citizens aged 70 and above can now get their Ayushman Vay Vandana Card through the Ayushman App and access ₹5 lakh of free treatment.
— Ministry of Health (@MoHFW_INDIA) May 25, 2025
Watch this video to learn how to create Ayushman Vay Vandana Card and unlock essential healthcare benefits.#HealthForAll… pic.twitter.com/ZH005Xx410
நீங்கள் இப்போது ஏன் ஆயுஷ்மான் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்
இன்றைய சூழலில் வயதானவர்கள் மருத்துவ செலவிற்காகவே பல லட்சங்களை செலவு செய்ய வேண்டியுள்ளது. மருத்துவ பில்களை ஈடுகட்ட வேண்டும் என்றால், ஆயுஷ்மான் அட்டைக்கு விண்ணப்பிப்பது நல்லது. ஒருவர் 70 வயதிற்கு மேல் நல்ல உடல் நலத்துடன் இருக்க கண்டிப்பாக காப்பீடு அவசியம் ஆகும். இதன் மூலம் மருத்துவ பில்களை லட்சங்களில் சேமிக்கலாம். இதய அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய் சிகிச்சை அல்லது வேறு ஏதேனும் சிகிச்சை என்றாலும, ஆயுஷ்மான் திட்டத்தில் சிகிச்சை பெறலாம். இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால் உடனே விண்ணப்பித்து அட்டையை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications