திருவள்ளூரில் என்னாக போகுதோ? வளர்மதி வர்றாங்க.. திமுக அரசை கண்டித்து ஆவடியில் அதிரடி காட்டுது அதிமுக
சென்னை: தேர்தல் கூட்டணி விவகாரங்கள் ஒருபக்கம் பரபரத்து கிடந்தாலும், திமுக அரசுக்கு எதிரான வியூகங்களை அதிமுக கையில் எடுத்து வருகிறது.. திமுக அரசை விடாமல் விமர்சித்தும் வருகிறது.. அந்தவகையில் இன்றைய தினம், தமிழக அரசுக்கு எதிரான தன்னுடைய கண்டன ஆர்ப்பாட்டத்தை திருவள்ளூரில் நடத்த திட்டமிட்டுள்ளது.. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது திமுகவின் கவனத்தையும் பெற்று வருகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்தவகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தீவிரமான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தந்த மாவட்ட மக்களை சந்தித்து மாநில அரசு குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்..

மற்றொருபுறம், நிர்வாகத் திறனற்ற அரசு உள்ளதாக கூறி, மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றித் தரப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் சீர்கேடுகளை சுட்டிக்காட்டி, இந்த ஆர்ப்பாட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம்
அந்தவகையில், திருவள்ளூர் மாவட்டத்திலும், இன்று ஆர்ப்பாட்டம் நடத்த போகிறார்.. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை; பாதாள சாக்கடை முறையாக அமைக்கப்படவில்லை; கொசு மருந்து முழுமையாக அடிக்கப்படுவதில்லை.
இதன் காரணமாக மக்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளால் அவதியுற்று வருகின்றனர். மக்களின் வாழ்வாதார வசதிகளை செய்து தராத நிலையில் வீட்டு வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இங்குள்ள கடைகளுக்கு குப்பை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்களும், வியாபாரிகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இன்று மாலை ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளையும், நிர்வாக சீர்கேடுகளையும், கண்டும் காணாமலும் இருந்து வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில், வருகிற 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில், ஆவடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; கழக சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.அப்துல் ரஹீம், கழக அமைப்புச் செயலாளர் திருவேற்காடு பா. சீனிவாசன், திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வி. அலெக்சாண்டர், முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
சிறிதும் அக்கறை இல்லாத அரசு
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதி, நகரக் கழகச் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத திமுக ஸ்டாலின் மாடல் அரசையும்; ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications