ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்! அப்படியே அப்பாவை போல் நடந்த குழந்தை! கண்ணீரில் பிஎஸ்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு அவருடைய மனைவி பொற்கொடி தனது குழந்தையுடன் விழா மேடைக்கு வந்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். இதில் பகுஜன் சமாஜ் கட்சியினரும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

armstrong bsp police

ஆம்ஸ்ட்ராங்கின் மனை பொற்கொடியும் அவருடைய சின்னஞ்சிறு குழந்தையும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும் என பொரிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர். மேலும் பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியினரும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களும் கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் பொற்கொடி துக்கம் தாளாமல் அழுதுவிட்டார். அவரை பார்த்து குழந்தையும் அழத் தொடங்கியது. ஏற்கெனவே குழந்தை அப்பா அப்பா என கேட்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நீதி வேண்டும் நீதி வேண்டும் , படுகொலைக்கு நீதி வேண்டும் என கோஷமிட்ட போது பொற்கொடியும் அவருடைய குழந்தையும் விழா மேடைக்கு வந்தனர்.

பொற்கொடியின் குழந்தை வெண்மை நிற ஆடை அணிந்துக் கொண்டு அப்படியே ஆம்ஸ்ட்ராங் மாதிரியே நடந்து வந்த காட்சிகளை பார்த்து அவருடைய ஆதரவாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். பொற்கொடிக்கு பெண்கள், வயதானவர்கள் எல்லாம் கையை பிடித்துக் கொண்டு அண்ணனை விட்டுட்டியே , தம்பியை விட்டுட்டியே என கதறிய காட்சிகள் காண்போரை கலங்க செய்தது.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை கொல்வோம் என மிரட்டல் விடுத்திருந்த பள்ளித் தாளாளர் அருண்ராஜ் இன்று கைது செய்யப்பட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் அவர் புதிதாக கட்டி வரும் வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், கஞ்சா அஞ்சலை உள்ளிட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் கருதியதால் பழிக்கு பழியாக இந்த கொலை நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம், மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை அடையாளம் காட்ட சென்ற போது போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற போது ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் வழக்கறிஞர்கள்.

கைதாகியுள்ள 23 பேரின் சொத்துகளை முடக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவுடி சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்போ செந்தில் தாய்லாந்து நாட்டிறகு தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. சீசிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வதாமன் கைது செய்யப்பட்டார். அது போல் பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான பாஜக கனகராஜிடம் விசாரணை நடத்தப்பட்டது. கொலை வழக்கில் கைதான ரவுடிகள் நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் பால் கனகராஜூக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+