பக்ரீத் பண்டிகை 2023: "இந்த" 5 உணவுகள் இல்லாத ஈகை திருநாளா? நோ சான்ஸ்! பார்த்தாலே எச்சில் ஊறும்!
சென்னை: பக்ரீத் பண்டிகை, நாளை வியாழக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் இந்த நிகழ்வுக்கு என்னென்ன உணவுகளை சமைப்பார்கள் என்பதை பார்ப்போம்.
இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். இதில் பக்ரீத் முக்கிய பண்டிகையாக கருதப்படுகிறது. இது ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
இறைவனின் தூதரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை 3 பங்குகளாக பிரிப்பர்.
ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மறு பங்கை ஏழைகளுக்கும், மூன்றாவது பங்கை தங்களது தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த பக்ரீத் பண்டிகை ஈகைத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய தினம் ஒரு 5 வகையான உணவுகளை இஸ்லாமியர்கள் கட்டாயம் சமைப்பர்.

அவை மட்டன் பிரியாணி, மட்டன் கோர்மா, சாப்லி கபாப்ஸ் (மட்டன் வடை), டேட்ஸ் ஷேக், ஷீர் குர்மா (சேமியா பாயாசம்) ஆகிய 5 உணவுகள் இல்லாமல் பக்ரீத் பண்டிகையே இல்லை என சொல்லலாம். இதில் மட்டன் பிரியாணி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பிரியாணி இல்லாத கல்யாணமும் பண்டிகையும் முஸ்லீம்கள் வீடுகளில் இல்லை. பக்ரீத் அன்று இறைவனின் பெயரை சொல்லி பலியிடப்பட்ட இறைச்சியை கொண்டு பிரியாணி தயாரிப்பர்.
மட்டன் கோர்மா- இந்த டிஷுக்கும் ஆட்டிறைச்சி தேவைப்படுகிறது. இதில் மசாலாக்கள், தயிர், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் இந்த உணவு மிகவும் பிரபலமாகும். இதை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவர்.
சாப்லி கபாப்ஸ்- இன்று கபாப்கள் உணவின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. ஹோட்டலுக்கு சென்றாலும் முதலில் ஸ்டார்ட்டர்களில் இந்த கபாப்களைத்தான் ஆர்டர் செய்து சாப்பிடுவர். இந்த உணவை துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சியை கொண்டு தயாரிப்பர். இதற்கும் மட்டனை பயன்படுத்துகிறார்கள். ஆனால்அதிக சதைகளை கொண்ட மட்டன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. கிட்டதட்ட வடை என்றே சொல்லலாம். இதில் எலுமிச்சையை பிழிந்து கொத்தமல்லி தழையை தூவி பரிமாறுவர்.
பேரீச்சம் பழம் ஷேக்- பக்ரீத் பண்டிகை அன்று பீப், மட்டன், ஒட்டகம் உள்ளிட்ட கடினமான கறிகளை சாப்பிடுவதால் அவரை வயிற்று பகுதியில் தேங்காமல் இருக்க ஒரு ஜூஸ் குடிக்கிறார்கள். பேரீச்சம் பழத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிவிட்டு அதன் பால் , சர்க்கரை சேர்த்து மீண்டும் அடிப்பார்கள். தேவைப்படுவோர் ஐஸ் போட்டுக் கொள்வர். கிரென்ச்சியாக இருக்க நட்ஸ்களையும் சிறிது சிறிதாக உடைத்து தூவிக் கொள்ளலாம்.
ஷீர் குர்மா- இது ஒன்றுமில்லை, பால் பாயாசம்தான். இதிலும் பேரிச்சம் பழத்தை போடுவர். சிலர் உலர் பழங்களையும் போட்டு தயாரிப்பவர். இதுவும் நம் வயிற்றில் தங்கும் கடினமான கறிகளை அகற்றிவிடும். ஜீரணத்திற்கு நல்லது இதில் சில ஏலக்காய் பொடியையும் தூவினால் வாசனையும் சுவையும் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications