அய்யா வைகுண்டரை பெருமைப்படுத்த சாலை,பல்கலை.க்கு பெயர் சூட்டுங்கள்: ஆளுநருக்கு பால பிரஜாபதி கோரிக்கை
சென்னை: அய்யா வைகுண்டரை பெருமைப்படுத்த சாலை, பல்கலைக்கழங்களுக்கு பெயர் சூட்டுங்கள் என ஆளுநர் ஆர்என் ரவிக்கு பால பிரஜாபதி கோரிக்கை வைத்துள்ளார். அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்என் ரவியின் கருத்து விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் பால பிரஜாபதி கண்டித்து உள்ளோடு இந்த கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
அய்யா வைகுண்டரின் 192வது பிறந்தநாள் விழா சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவி சார்பில் அய்யா வைகுண்டரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி பேசியது விவாதத்தை கிளப்பி உள்ளது.

அதாவது அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம். சனாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார் என கூறியிருந்தார். அய்யா வைகுண்டர் என்பவர் சாதி பாகுபாட்டுக்கு எதிராக தோன்றி சமத்துவம் பேசியவர். இத்தகைய சூழலில் தான் ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
மேலும் அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு அய்யா வைகுண்டர் தலைமை பதி அடிகளார் பாலபிராஜபதி கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதி நிர்வாகி பாலபிரஜாபதி செய்தியாளர் சந்திப்பில், ‛‛யாருடைய சுயலாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூறக் கூடாது. அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசி உள்ளார். ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பதுபோல் கவர்னர் பேசி உள்ளது வருந்தத்தக்கது. அய்யா வைகுண்டர் சனாதனத்தை ஆதரித்தவர் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என கண்டித்தார்.
மேலும் பால பிரஜாபதி கூறியதாவது: அடக்குமுறைக்கு எதிராக அவதாரம் எடுத்தவர் தான் வைகுண்டர். அவர் நாரயணனின் அம்சம். சிவன், விஷ்ணு, பிரம்மன், காளி என அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக்கினார். ஆணிவேர் அத்தனையையும் ஒன்றாக்கினார். அவரது பிறப்பை பெரிதாக கொண்டாட வேண்டும். கவர்னிடம் நாங்கள் நீண்ட காலமாக கேட்டு வருகிறோம்.
அய்யாவை இங்கிருந்து கயிறு கட்டி இழுத்து சென்று திருவிதாங்கூர் அரசன் கொடுமைப்படுத்தினான். அவர் ரத்தம் சிந்திய ரோட்டுக்கு அய்யா வைகுண்டர் தேசிய நெடுஞ்சாலை என பெயர் வைக்க கேட்கிறோம். பல மகான்களின் பெயர்களில் சாலை உள்ளது. அய்யா வைகுண்டர் அடிப்பட்டு ரத்தம் சிந்திய இந்த சாலைக்கு அய்யா வைகுண்டர் பெயர் வைப்போம் என அவர் அறிவித்து இருக்கலாம். யூனிவர்சிட்டிக்கு அய்யா வைகுண்டர் பெயரை வைப்போம். நியாயத்தை கேட்டவர், நீதியை கேட்டவர் என்பதற்காக பெயர் வைப்போம் என அறிவித்து இருக்கலாம்.
மாறாக இப்படி பேசியதை கண்டிக்கிறோம். கவர்னர் அல்ல யார் இப்படி செய்தாலும் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.
வரலாறு தெரியாமல் வாய் திறக்க கூடாது என்பது எங்களின் கோரிக்கை. மனுதர்மம் எங்கே இருக்கிறதோ அங்கு நாங்கள் இல்லை. இந்த நாட்டுக்கு அரசியல் சட்டத்தை இயற்றி தந்த அம்பேத்கர் என்ன சொன்னார்? அவர் பிறந்த சமுதாயத்தில் சாதி உள்ளது எனக்கூறி அதில் இருக்கமாட்டார் எனக்கூறினாரே ? அது சரியா. தவறா?.
எனவே நீங்கள் உங்களின் வேலையை செய்யுங்கள். உங்களுக்கு ஆளுகிற வேலை இருக்கிறது. அரசு பதவியில் இருப்பவர்கள் அரசு வேலையை செய்ய வேண்டும். ஆன்மிகத்துக்குள் வரக்கூடாது. ஆன்மிகத்துக்குள் இருக்கும் எங்களுக்கு தெரியாத வரலாறு இல்லை. வைகுண்டர் வகுத்து தந்த அகில திரட்டு எங்கள் கையில் உள்ளது. அவரது அருள் எங்களிடம் இருக்கிறது.
ஏதோ நாலு பேரை பிடித்து வைத்து கொண்டு அகில திரட்டுக்கு சிறப்பு செய்கிறோம் என செய்யக்கூடாது. வாருங்கள் இதே இடத்தில் 2 மைக்கை வைத்து தருகிறேன். வைகுண்டர் பற்றியும், அவரது கொள்கைகள் பற்றியும் பேசுங்கள். ஒன்று உறுதி. அவர் சாதியத்தை காக்க வரவில்லை. வடமொழியை நிலைநிறுத்த வரவில்லை. ஹோமம், வேள்வி நடத்த வரவில்லை. உருவ வழிபாட்டை வணங்க வரவில்லை. இதற்கு எல்லாம் எதிராக வந்தவர் வைகுண்டர்'' என்றார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications