Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எகிறி குதிக்கும் எடப்பாடி.. ஓபிஎஸ் ஷாக்.. "பழைய பொதுக்குழுவிற்குதான் பொருந்தும்".. ஹைகோர்ட் அதிரடி

அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான நீதிமன்ற வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், பழைய உத்தரவுகள் அனைத்தும் ஜுன் 23 பொதுக்குழுவிற்கு மட்டுமே பொருந்தும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்... மேலும், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த மேல்முறையீட்டில் கோர முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Recommended Video

    அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடியதாக இருக்க வேண்டும் -சசிகலா

    கடந்த ஜுன் 23 ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டம் நடந்ததில் இருந்துதான் அதிமுகவில் பிளவும் அதிகமாகிவிட்டது.

    இந்த கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர புதிய தீர்மானங்கள் அல்லது முடிவுகள் எடுக்க கூடாது என்றும், பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கேட்டும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    ராமசாமி

    ராமசாமி

    இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை நீதிமன்றம் யூகித்து முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை என்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி வழங்கினார்... மேலும் தடை கோரிய இடைக்கால கோரிக்கையும் நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது.. இந்த வழக்கு நீதீபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணை நடைபெற்றது.

     23 தீர்மானங்கள்

    23 தீர்மானங்கள்

    அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திட்டமிட்டபடி பொதுக்குழு நடத்தலாம் என்றும், ஏற்கெனவே ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாமே தவிர அதன் மீது எந்த முடிவும் எடுக்க கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.. இதையடுத்து, ஜுன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர் சி.வி.சண்முகம் அதிரடியாக அறிவித்தார்.

     தமிழ்மகன் உசேன்

    தமிழ்மகன் உசேன்

    மேலும், நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதனை, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வழிமொழிந்தனர்... இதையடுத்து, அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11ம் தேதி நடைபெறும் என்று தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.. இதனிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11-ல் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு சென்னை ஹைகோர்ட்டில் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

     எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    அந்த மனுவில், "உயர்நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும்.. தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதே நீதிமன்ற அவதிப்பாக உள்ளபோது, அடுத்தப் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது மன்னிக்க முடியாத செயல்..

    சண்முகம்

    சண்முகம்

    நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்துகிறது. எனவே நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும்.. கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்காததால், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்" என்று சண்முகம் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

     எகிறும் எதிர்ப்பார்ப்பு

    எகிறும் எதிர்ப்பார்ப்பு

    சட்டரீதியாக மட்டுமே தனக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்று ஓபிஎஸ் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய கோர்ட்டின் தீர்ப்பு ஓபிஎஸ் முயற்சிக்கு கை கொடுக்குமா? பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா? என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் எகிறி வந்த நிலையில், இதற்கான உத்தரவை நீதிபதிகள் வழங்கி உள்ளனர். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான், இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்தனர்..

     பொதுக்குழு

    பொதுக்குழு

    மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்று ஆராய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது.. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம், இரு தரப்பு வாதங்கள் நடந்தன.. இதை கேட்ட நீதிபதிகள், "இதில் நீதிமன்ற அவமதிப்பு இருக்கிறதா? என்பதை மட்டுமே நீதிமன்றம் ஆராய முடியும்.. அன்று நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும்... ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும் என்று இந்த முறையீட்டில் கோரிக்கை வைக்கமுடியாது. ஏனென்றால், ஜுன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தொடர்பாக மட்டுமே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கும் அமர்வு விசாரிக்க முடியும். அவைத்தலைவர் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி கூட்ட முடியும்? எனவே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது என்றனர்..

     அட்வைஸ்

    அட்வைஸ்

    இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி நியமிக்கப்பட்ட அவைத்தலைவர் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.. அதைக் கேட்ட நீதிபதிகள், "அவைத்தலைவர் நியமனம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஏற்று கொண்டாரா? அதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்" என்று கேட்டனர்.. மேலும், ஜுன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் குறித்து மட்டுமே இந்த அமர்வில் விசாரிக்க முடியும். ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியை தான் அணுக வேண்டும்... பொதுக்குழுவுக்கு தடை வேண்டுமெனில் அதற்கென தனி நீதிபதியிடம் மனுவை தாக்கல் செய்யுங்கள் என்று அறிவுறுத்தினர்.

     ஒத்திவைப்பு

    ஒத்திவைப்பு

    உடனே ஓபிஎஸ் தரப்பு அப்படியானால், இந்த வழக்கு விசாரணையை நாளை மறுநாளே ஏற்று நடத்தும்படி கோரிக்கை வைத்தனர்.. அதற்கு எடப்பாடி தரப்பிலோ, நாளை மறுநாள் 6ம்தேதி உச்சநீதிமன்றத்தில், அதிமுக வழக்கு வரஉள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, வரும் 7ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் வரும் 7-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+