பிரபல அம்மன் கோயில் பிரசாதம்.. பாக்யஸ்ரீ கதையை முடித்த கர்நாடக மாமா! வாழைப்பழத்துக்கு இந்த அக்கப்போரா
சென்னை: கோயில் திருவிழாக்களில் தகராறுகள், வன்முறைகள் வெடிக்கும் சம்பவம் ஆங்காங்கே நடப்பது இயல்புதான்.. ஆனால், கோயிலில் அம்மனுக்கு படைத்த தேங்காயை பெறும் விவகாரமானது கொலை வரை சென்றுள்ளது, கர்நாடக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.. இதுதொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தாலும், பாக்யஸ்ரீயின் மாமா இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.
இந்தியாவில் கோவில் திருவிழாக்களுக்கென்று மகத்தான பெருமைகள், வரலாறுகள் உண்டு.. சில விநோத திருவிழாக்களும் நடப்பதுண்டு.. பெண்கள் மட்டுமே கொண்டாடும் விழாக்கள் உள்ளதுபோல, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்களும் உண்டு.. வருடம் ஒருமுறை நடக்கும் திருவிழா என்பதால் அந்தந்த பகுதி மக்களே திரண்டு நின்று விழாக்களை கொண்டாடுவார்கள்.

அதேசமயம், இதுபோன்ற கோயில் விழாக்களில் தகராறுகள் ஏற்படுவதும் சகஜமாகும்.. இதற்கு பல காரணங்கள் உள்ளன..
கோயில் தகராறுகள்
குறிப்பாக, கறி விருந்துகளில் பங்கு பெறுவது தொடர்பான பிரச்சனைகள், வழிபாட்டு நடைமுறைகளில் வேறுபாடுகள், திருவிழாவின் போது நடனமாடும்போது ஏற்படும் பிரச்சனைகள், கோவில் நிர்வாகம் மற்றும் விழாவை நடத்துவது தொடர்பான முரண்பாடுகள், கோவில் திருவிழாக்களை நடத்துவதில் இருதரப்பினரிடையே மோதல், திருவிழாவின்போது, அரசியல் விளம்பரங்கள், தேவையற்ற அரசியல் தலையீடுகள்,
என பல்வேறு காரணங்களால் தகராறுகள் வெடிக்கும்..
அதனால்தான், தகராறுகளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், காவல்துறையினர் திருவிழாக் காலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்..
அம்மனுக்கு பூஜை
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ள ஒரு கோயில் திருவிழாவானது, ரணகளமாகி, கொலை வரை சென்றிருக்கிறது.. உத்தர கன்னடா மாவட்டம் ஜோய்டா தாலுகாவில் உள்ளது அமேசத் என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் பாக்யஸ்ரீ என்பவர் தன்னுடைய கணவர், 4 மகன்களுடன் வசித்து வருகிறார்.
இக்கிராமத்தில் பிரபலமான அம்மன் கோவில் அமைந்துள்ளது... வழக்கமாக இந்த கோயிலிலுள்ள அம்மனுக்கு வைத்து பூஜிக்கப்படும் தேங்காய் மற்றும் வாழைப்பழங்களை கோவில் நிர்வாகத்தார் பாக்யஸ்ரீயின் குடும்பத்துக்கு தந்து வந்துள்ளனர்.. கடந்த 5 வருடங்களாகவே, கோவிலில் வைத்து பூஜிக்கப்படும் தேங்காய், பழங்கள் பாக்யஸ்ரீ வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறது..
பூஜிக்கப்படும் தேங்காய்கள், வாழைப்பழங்கள்
ஆனால் இது பாக்யஸ்ரீக்கு ஆதரவாக தீர்ப்பு தந்துவிட்டார்கள்.. அதாவது தொண்டுவரகா என்பவருக்கு பிடிக்கவில்லை.. பாக்யஸ்ரீயின் மாமா உறவுமுறைதான் இந்த தொண்டுவரகா.. அதெப்படி கோயில் பிரசாதங்கள், எப்போதுமே பாக்யஸ்ரீ வீட்டுக்கு மட்டும் செல்கிறது? என்று வரகா கேள்வி எழுப்பினார்.. இதையடுத்து, இந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்துவரை சென்றது..
பாக்யஸ்ரீ குடும்பத்துக்கு பூஜிக்கப்பட்ட பொருட்கள் செல்ல என்ன காரணம்? என்று வரகா கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தார்.. இதுகுறித்து விசாரித்த பஞ்சாயத்தார், கோவிலில் வழங்கப்படும் முதல் மரியாதையும், அம்மனுக்கு படைத்து பூஜிக்கப்படும் தேங்காய்கள்,
வாழைப்பழங்களும் பாக்யஸ்ரீ குடும்பத்தாருக்கு தான் சொந்தம் என்று சொல்லி, பாக்யஸ்ரீக்கு ஆதரவாக தீர்ப்பு தந்துவிட்டார்கள்..
உருட்டுக்கட்டையுடன் கொடூரம்
பஞ்சாயத்தார்களும் பாக்யஸ்ரீக்கு ஆதரவாக பேசியதால், வரகா மேலும் கடுப்பானார்.. இதனால் வரகாவுக்கும், பாக்யஸ்ரீக்கும் இடையே தகராறு வலுக்க ஆரம்பித்தது..
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தொண்டுவரகா உருட்டு கட்டையை எடுத்து சென்று பாக்யஸ்ரீயின் தலையில் ஓங்கி அடித்தார்.. இதில் படுகாயமடைந்த பாக்யஸ்ரீ, அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்தார்.. உடனே தொண்டுவரகா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தேங்காய்கள், வாழைப்பழங்கள்
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜோய்டா புறநகர் போலீசார், பாக்யஸ்ரீயின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் தொண்டுவரகா தலைமறைவாகவே உள்ளதால், இன்னும் போலீசாரிடம் சிக்கவில்லை.
அம்மனுக்கு படைத்த தேங்காய்கள், வாழைப்பழங்களை பெறும் விவகாரத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications