கேட்டீங்களா இந்த அநியாயத்தை.. 200 வாழையிலை ரூ.1,500.. திணறுது தமிழ்நாடு.. தூத்துக்குடியில் பாருங்க
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூஜை பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. விநாயகர் சிலை உட்பட, பூக்கள், வாழைப்பழம், உள்ளிட்ட பொருட்களின் விலையும் தமிழக சந்தைகளில் அதிகரித்து காணப்படுகிறது.
நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை தேசம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது... இதையொட்டி சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த வருடம் மூலப்பொருள்களின் விலை ஏற்றத்தால் விநாயகர் சிலைகள் விலை அதிகரித்திருத்து காணப்படுகின்றன.. சிலைகள் தயாரிப்பு பணியில் கைவினை தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
காகித அட்டைகள்: மரவள்ளிக்கிழங்கு மாவு, காகித கூழ், காகித அட்டைகள், பேப்பர் மாவு ஆகியவைகளுடன் விநாயகர் சிலைகள் தயாராவதால், விலையும் அதிகரித்துள்ளதாகவும், இந்த விலை உயர்வானது கடந்தாண்டை விட அதிகரித்துள்ளதாகவும் திண்டுக்கல் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
வார விடுமுறை & சுபமுகூர்த்த தினம் & பிள்ளையார் சதுர்த்தி போன்றவைகளை முன்னிட்டு, தமிழகம் முழுவதுமுள்ள சந்தைகளில், பூஜை பொருட்கள், காய்கறிகள், மலர்கள், வாழையிலை, வாழைத்தார்கள் என அனைத்துமே விலை உயர்ந்து காணப்படுகிறது..
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலர்ச்சந்தையானது, தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும்.. இங்கிருந்துதான், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.. இங்கிருந்துதான், திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், பிச்சிப்பூ கிலோ ரூ.1000க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.1100க்கும், அரளிப்பூ கிலோ ரூ.200க்கும், வாடாமல்லி கிலோ ரூ.50க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.50க்கும், சம்பங்கி கிலோ ரூ.250க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1100க்கும், ரோஸ் கிலோ ரூ.300க்கும் இன்று விற்பனையாகிறது... ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.300க்கும், துளசி கிலோ ரூ.30க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.15க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.150க்கும், செவ்வந்தி கிலோ ரூ.200க்கும், அருகம்புல் ஒரு கட்டு ரூ.30க்கும் விற்பனையாகி வருகிறது.
தூத்துக்குடி: திண்டுக்கல், தூத்துக்குடி காய்கறி சந்தையிலும், பூக்கள் பழங்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.. பூவன்வாழை தார், ரஸ்தாளி, நாட்டு வாழை, கற்பூரவள்ளி போன்ற வாழைத்தார்கள் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.2,500-க்கும் மல்லிகை, முல்லை ரூ.400-க்கும், பிச்சிப்பூ ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வாழைத்தார், வாழை இலைகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளன.. 200 இலை கொண்ட ஒரு கட்டு கடந்த வாரம் ரூ.800-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வாழையிலை: பெரிய இலைக்கட்டு ரூ.6,500 வரை விற்பனையாகிறது. வழக்கமாக சுபமுகூர்த்த நாட்களில் வாழை இலைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். இபபோது பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை என்பதால், பிள்ளையாரை வாழை இலையில் வைத்து வழிபடுவதுதான் வழக்கமாக உள்ளது. அதனால்தான், இதன் விலை இன்னும்கூட உயரக்கூடும் என்கிறார்கள். ஆனால், வாழை இலைகளின் தேவை அதிகமாக உள்ளதால், விலையை குறைத்தால், இன்னும் அதிகமாக வாங்க முடியும் என்கிறார்கள் பொதுமக்கள்..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications