Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெஸ்ட் ஹவுஸில் ஆசிரியை அத்துமீறல்! இப்ப பெங்களூரில் பெண் லேப் டெக்னீஷியன்! ஒழுக்கத்தை போதிப்பவர்களே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுவர், சிறுமிகளின் நலனை காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன.. அனைத்துக்கும் மேலாக, பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுவர்களை தண்டிக்க நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன.. அப்படியிருந்தும்கூட, பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது... அதிலும், ஒழுக்கத்தையும், கல்வியையும் போதிக்கக்கூடிய ஆசிரியர், ஆசிரியைகளே இதுபோன்ற அநாகரீக காரியங்களில் இறங்கிவிடுவது மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் தந்து வருகிறது.. இப்போது என்ன நடந்தது ஆந்திராவில்?

சமீபத்தில்தான், மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் ஒரு கொடுமை நடந்தது.. ஷில் - பாடா என்ற பகுதியில் வசித்து வரும் தம்பதி, தங்களது 10 வயது மகனை, பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்கள்.. இந்த பள்ளியின் 22 வயது ஆசிரியைக்கு, இந்த 10 வயது மாணவன் மீது தவறான பார்வை விழுந்துள்ளது..

Bangalore Guests House Lab Technician

கெஸ்ட் ஹவுஸ்

பிறகு, மாணவனை விருந்தினர் அறைக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் தொல்லை தந்ததுடன், பலாத்காரமும் செய்ததாக கூறப்படுகிறது. இதைபற்றி வெளியில் சொன்னால், உன்னுடைய அம்மாவையும், அப்பாவையும் கொன்றுவிடுவதாகவும், அந்த டீச்சர் மிரட்டியிருக்கிறார்..

நாளுக்கு நாள் ஆசிரியையின் தொல்லை எல்லைமீறிவிட்ட நிலையில், தனக்கு நடந்த அக்கிரமங்களை பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறான் மாணவன்.. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இது குறித்து போலீசில் புகார் தந்ததன் அடிப்படையில், 22 வயதான ஆசிரியை மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடந்து வருகிறது.

லேப் டெக்னீஷியன்

இதோ ஆந்திரா மாநிலத்திலும் ஒரு அக்கிரமம் தற்போது நடந்துள்ளது.. சித்தூரை சேர்ந்த 19 வயது மாணவர் தனியார் கல்லூரியில் பி.டெக் முதல் வருடம் படித்து வருகிறார். இதே கல்லூரியில் 38 வயது பெண் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார்..

இந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், தன்னுடைய கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.. இந்நிலையில் கல்லூரியில் 19 வயது சித்தூர் மாணவருடன் நெருங்கி பழங்கியிருக்கிறார்.. ஒருகட்டத்தில் மாணவரை காதலிப்பதாகவும் சொல்லி உள்ளார்.. இதனால், மாணவரின் மனமும் மாறத்துவங்கி, அப்பெண்ணை காதலித்துள்ளார்.

பெங்களூரில் டிரெயினிங்

கடந்த மே மாதம், படிப்பு சம்பந்தமாக பெங்களூரு டிரெயினிங் நடப்பாக பொய் சொல்லிவிட்டு, அந்த பெண்ணுடன் கிளம்பி சென்றுவிட்டார். ஆனால், மாணவன் அதற்கு பிறகு வீட்டுக்கு திரும்பவேயில்லை..

இதனால் பதறிப்போன பெற்றோர் சந்தேகமடைந்து, கல்லூரியிலேயே விசாரித்தனர். அப்போதுதான், அப்படியொரு டிரெயினிங் நடக்கவில்லை என்றும், கல்லூரியில் பணிபுரியும் பெண், ஆசைவார்த்தை சொல்லி அழைத்து சென்றதும் தெரியவந்தது.

சித்தூரில் பரபரப்பு

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சித்தூர் 2-வது டவுன் போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், பெங்களூருவில், லாட்ஜில் ரூம் எடுத்து, கடந்த 2 மாதங்களாகவே மாணவருடன் பெண் ஊழியர் தங்கிவந்தது அம்பலமானது..

இதையடுத்து, இருவரையுமே அங்கிருந்து மீட்ட போலீசார் , இருவருக்குமே அறிவுரைகளை தந்து, இருவரையுமே தனித்தனியாக அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.. 2 மாதமாக மாயமான மாணவனை மீட்டெடுத்த சம்பவம் சித்தூரின் கவனத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+