Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பங்காரு அடிகளார் மரணம்... ஆன்மீகவாதிகளுக்கு கண்டம்.. 6 மாதங்களுக்கு முன்பே கணித்த ஜோதிடர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் அம்மா பங்காரு அடிகளார் உடல் நலக்குறைவினால் காலமாகிவிட்டார். அவரது மறைவு பல லட்சம் பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூரியன் நீச்சமடைந்திருக்கும் ஐப்பசி மாதத்தில் கேது, சூரியன், செவ்வாய், புதன் நான்கு கிரகங்கள் சேர்ந்துள்ளன. மேஷ ராசியில் ராகு குரு இணைந்துள்ளதால் ஆன்மீகவாதிகள் உயிருக்கு ஆபத்தாகக்கூடும் என்று ஜோதிடர்கள் முன்பே கணித்திருந்தனர்.

ஐப்பசி மாதத்தில் கால புருஷ தத்துவப்படி 1ஆம் பாவத்திலும் 7ஆம் பாவத்திலும் ராகுவும் கேதுவும் பயணம் செய்கின்றனர். ஆன்மீகத்தின் அதிபதி குரு ராகு உடன் சேர்ந்திருக்கிறார். கேதுவின் பார்வை குரு ராகுவிற்கு கிடைக்கிறது. துலாம் ராசியில் நீச்சம் பெற்ற சூரியனுடன் கேது, செவ்வாய்,புதன் இணைந்திருக்கின்றனர்.

Bangaru adigalar death astrologer Predictions spiritual guru death

கால புருஷ தத்துவப்படி 1,7,11ஆம் பாவங்களில் ராகு, குரு, கேது, சூரியன், சனி கிரகங்கள் பயணம் செய்வதால் மிகப்பெரிய ஆன்மீக தலைவர்களுக்கு ஆபத்தாகக்கூடும். கிரக அமைப்புகளின் படி பார்க்கும் போது ஆன்மீக சான்றோர்கள், மடாதிபதிகளுக்கு கண்டம் ஏற்படக்கூடும் என்று ஜோதிடர்கள் கணித்திருந்தனர்.

அக்டோபர் இறுதி வரைக்குள் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் இருப்பதால் ஆன்மீக மடாதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விசயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கடந்த மாதமே கணித்து கூறியிருந்தனர். அவர்கள் கணித்திருந்தது போலவே பங்காரு அடிகளாரின் மரணம் அவரது பக்தர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன் தனது சோபகிருது வருட பொது பலன்களில் இந்த ஆண்டு ஆன்மீகவாதிகள் உடல் நலம் பாதிக்கப்படும் என்று ஏப்ரல் மாதத்திலேயே கணித்து எழுதியிருக்கிறார்.

ஜோதிடரின் பல கணிப்புகள் பலித்துள்ளன. ஆலயங்கள் சேதமடைந்தன. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் என்று கணித்தது போலவே பல நிதி நிறுவனங்கள் மோசடி செய்து மக்களை ஏமாற்றினர். வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் வாடிக்கையாளர்கள் கணக்கில் தவறாக செலுத்துப்பட்டு சர்ச்சையானது.

1. புதிய வானியல் நிகழ்வுகள் கண்டறியப்படும். நட்சத்திர கூட்டத்திலோ அல்லது சூரியனில் சில அதிசய மாற்றங்கள் அறிவியலால் கண்டறியப்படும்.
2. ஐந்து அல்லது ஆறு புயல்கள் வங்காள விரிகுடாவில் உருவாகி தமிழகத்தை கடந்து செல்லும். அதனால் நல்ல மழை நமது தமிழகத்திற்கு உண்டு.
3. பூமி சுழற்சி பற்றிய புதிய தகவல்கள் வரும். சித்தர்கள் அருளால் அல்லது தெய்வ ஆற்றலால் பூமி தன் பாதையை மாற்றி கொள்ளும், இதனால் விண்கற்கள் தாக்குதலில் இருந்து பூமி பாதுகாக்கப்படும்.
4. மின்னணு துறையில் இந்தியா நல்ல பெயர் பெறும்.
5. விளையாட்டு துறையில் பெண்கள் சாதனை செய்வார்கள்.
6. புதிய பாட திட்டங்கள் மூலம் மாணவர்கள் நலம் பெறுவார்கள்.
7. தங்கம் விலை முதலில் குறைவது போல குறைந்து, பின் அதிக விலைக்கு செல்லும்.
8. பொருளாதாரத்தில் இந்தியா உறுதியான திட்டங்கள் மூலம் சரியாமல் நல்ல நிலையில் இருக்கும்.
9. வங்கி அதிகாரிகளுக்கு பல நற்செய்திகள் அரசாங்கம் மூலம் அறிவிக்கப்படும்.
10. டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்திய பொருளாதாரம் உயரும். முன்னுதாரணமாக திகழும்.
11. மாநில அரசியலில் புதிய பதவிகள் அறிவிக்கப்படும். புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்படும்.
12. மண் சரிவு, பனி மலைகளில் பனி சரிவு ஏற்படும்.
13. கடல் மட்டம் உயர்ந்து நீரால் பல இந்தியா பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கடல் அருகில் இருக்கும் நாடுகள் பாதிக்கும்
14. அரசியல்வாதிகள் பலரும் உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். சிலருக்கு உயிர் கண்டங்கள் உண்டு.
15. இந்த வருடம் அதிக வெப்பம் காரணமாக பல வயோதிகர்கள் பாதிக்கப்படுவார்கள்
16. ஆடி அல்லது ஆவணி மாதம் மாநிலங்களில் ஆளும் கட்சிகள் மீது பல சர்ச்சைகள் ஏற்படும்.
17. புதிய வைரஸ்/காய்ச்சல் அண்டை நாடுகளில் பரவி நமது நாட்டிற்கு பயத்தை உண்டாக்கும். அனால் அதனால் இந்திய பாதிக்க படாது.
18. இந்த சோபகிருத வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டால், மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறும்.
19. மேற்கு இந்திய நாடுகள் அல்லது ஐரோப்பிய நாடுகள் நீரால் அல்லது புயலால் பாதிக்கப்படும்.
20. சூரியன் அஸ்வினியின் செல்லும் காலம் உலகின் அதிகம் சக்தி வாய்ந்த நாடுகளில் போர் பதற்றம் உண்டாகும். ஆனால் போர் வராது.

Bangaru adigalar death astrologer Predictions spiritual guru death

22. ராணுவ வீரர்கள் அல்லது காவல் அதிகாரிகள் சர்ச்சைகள் ஏற்படும்.
23. சீனா அல்லது பங்களாதேஷ் எல்லையில் துப்பாக்கி சூடு அல்லது சர்ச்சைகள் ஏற்படும்
24. கோவில்களில் / ஆலயங்களில் அனாச்சாரங்கள் நிகழும்.
25. யானைகள் உடல்நலம் பாதிக்கப்படும்.
26. பழம்பெரும் ஆன்மீகவாதிகள் உடல்நலம் பாதிக்கும்.
27. கடக ரேகை அல்லது பூமத்திய ரேகை பகுதிகளில் அதிக நிலநடுக்கம் ஏற்படும். இது இந்தியாவில் உணரப்படும்.
28. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் சர்ச்சைகளுக்கு உள்ளாகும்.
29. நீதிபதிகள்/நீதிமன்றம் போன்றவை போராட்டம் அல்லது அவப்பெயர் ஏற்படும்.
30. சித்திரை முதல் புரட்டாசி வரை விமான, கப்பல், நீர் வழி விபத்து அல்லது தீவிபத்துகள் மூலம் கூட்டு மரணங்கள் ஏற்படும்.
31. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி, ஆடி ஆவணி மாதங்களில் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் அதன் பலம் பாதிக்காது.
32. துப்பாக்கி சூடு சம்பவங்கள் பல நடக்கும். ரவுடிகள் அல்லது தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படும். வனவிலங்குகள் காட்டில் இருந்து ஊருக்குள் வரும் .
இந்த தமிழ் புத்தாண்டு திருவோணம் நட்சத்திரத்தில் பிறப்பதாலும், அதன் அரசனாக புதன் வருவதாலும், பெருமாள் அல்லது நரசிம்ம பெருமாள் வழிபாடு அல்லது சுடலை மாடன் வழிபாடு அனைத்து வித கஷ்டங்களில் இருந்து நம்மை காக்கும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மணிகண்டன் பாரதிதாசன்.

பழம்பெரும் ஆன்மீகவாதிகள் உடல் நலம் பாதிக்கப்படும் என்று கணித்திருந்தது போலவே பல லட்சம் பக்தர்களைப் பெற்றிருந்த ஆன்மீகவாதி ஆதிபராசக்தி சித்தர் பீட தலைவர் பங்காரு அடிகளார் மரணமடைந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+