அக்கவுண்ட்டில் விழுந்த பணம்.. சேமிப்பு வங்கி கணக்கில் பணம்.. இதுதான் லிமிட்.. இல்லாட்டி சிக்கல்தான்
சென்னை: உங்களது சேமிப்பு வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் தெரியுமா? குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் வைத்திருந்தால், என்னாகும்?
சேமிப்பு என்றாலே, பணம், நகை உள்ளிட்ட அனைத்துமே அடங்கும்.. அந்தவகையில் பெரும்பாலான வீடுகளில், தங்க நகைகள் வைத்திருப்பார்கள்.. இதற்கு காரணம், செழிப்பான வாழ்வு இருக்கும் என்பதே இந்திய மக்கள் பலரது நம்பிக்கையாக உள்ளது.. அனைத்து வங்கிகளிலுமே லாக்கர் வசதி இருந்தாலும்கூட, வீட்டில் நகை வைத்திருப்பதை பலர் விரும்புவார்கள்.

விதிமுறைகள்: எனினும், தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. அதாவது திருமணமான பெண் 500 கிராம், அதாவது 62.5 சவரன் தங்கத்தையும், திருமணம் ஆகாத பெண் 250 கிராம், அதாவது, 31.25 சவரன் மதிப்புள்ள தங்கத்தை வைத்துக்கொள்ளலாம்.
திருமணமான மற்றும் திருமணம் ஆகாத என 2 தரப்பு ஆண்களுமே 100 கிராம் எடையுள்ள அதாவது 12.5 சவரன் தங்க ஆபரணங்களையும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வைத்திருக்கலாம்.
ஆவணங்கள்: ஒருவேளை தங்கம் வைத்திருப்பதற்கு சரியான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் வைத்திருக்கும் பட்சத்தில் தங்கம் வைத்திருப்பதற்கு வரம்பு எதுவும் கிடையாது.. நீங்கள் தங்கத்தை பரிசாகவோ அல்லது பரம்பரையாகவோ பெற்றிருந்தால், அதற்கான ஆவணத்தை நீங்கள் காட்ட வேண்டும். வருமான வரிக்கணக்கிலும் இதை கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு ஆவணமாக, தங்கத்தைப் பரிசளித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ரசீதையும் காட்டலாம்.
தங்கத்தை போலவே, பணத்திற்கும் ஒரு வரைமுறை உள்ளது.. நகையைபோலவே, கையிலுள்ள பணத்திற்கும் ஆவணங்கள் மிகவும் முக்கியம்.. அந்த பணம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என ஆதாரங்களையும் வைத்திருக்க வேண்டும். முறையான ஆவணங்களை காட்டிவிட்டால், எவ்வளவு பெரிய தொகையானாலும் அது பறிமுதல் செய்யப்பட்டுவிடும்.. அத்துடன் 137 சதவீதம் வரை அபராதமும் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
வரைமுறைகள்: அதேபோல, சேமிப்பு வங்கிக்கணக்கில் இவ்வளவுதான் பணம் வைத்திருக்க வேண்டும் என்ற வரைமுறை உள்ளது.. காரணம், தற்போது நிறைய பணமோசடிகளும், வரி ஏய்ப்புகளும் நடந்து வருகின்றன.. அதனால், நிதி நடவடிக்கைகளின் மோசடிகளை தடுக்கவும், பணப்பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்தவும், சில வரம்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அந்தவகையில், வங்கியில் அதிக பணம் சேமிப்பில் இருந்தால், அதில் கிடைக்கும் வட்டிக்கு, அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அதேபோல, ஐடிஆர் தாக்கல் செய்யும்போது, சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது? வட்டி எவ்வளவு கிடைத்தது, என்பதையும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். உங்களின் சேமிப்பு கணக்கு தொகையிலிருந்து நீங்கள் மாதம் மாதம் பெறும் வட்டி உங்கள் வருமானத்தில் சேர்க்கப்படும்.
வரித்துறை: அதாவது, உங்கள் கணக்கில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால், இது குறித்து வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.. இல்லாவிட்டால், இது வருமான வரி வரம்புக்கு உட்பட்டதாகிவிடும்.. இது வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக கருதி, வருமான வரித்துறை நோட்டீஸும் அனுப்பப்பட்டுவிடும்.
உங்களது சேமிப்பு கணக்கில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்... ஆண்டு வரம்பை பொறுத்தவரை, சேமிப்புக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.10 லட்சத்தை நீங்கள் ரொக்கமாக டெபாசிட் செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications