மகளிர் உரிமைத்தொகை வந்து 1 வாரம் ஆகியும்.. இதுமட்டும் நடக்கலை பார்த்தீங்களா? தங்கம் எடுத்த ஆக்சன்
சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை இரண்டாம் மாத தவணை வழங்கப்பட்டுவிட்டது. மணி ஆர்டர் மூலம் சிலருக்கு தாமதமாக பணம் வழங்கப்பட்டது.
ஆனாலும் கடந்த மாதத்தை விட இந்த மாதம் கூடுதலாக பணம் வழங்கப்பட்டுவிட்டது. கடந்த மாதம் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த மாதமே 14 மற்றும் 15 தேதிகளில் பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது. அதேபோல் இந்த மாதமும் வங்கிகள் விடுமுறை என்பதால் 15ம் தேதிக்கு பதிலாக 14ம் தேதியே பணம் அனுப்பப்பட்டது.

எத்தனை பேர்: இந்த திட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு எவ்வளவு பணம் அனுப்பப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டமும். தேவையுள்ள ஒருவர்கூட விடுபடாமல் தகுதியான பயனாளிகளைச் சென்றுசேர வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு அதிக அக்கறையுடன் செயல்பட்டுவருகிறது. அதுபோலவே. கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கும் தருதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.53 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் 1.06 கோடி தகுதியான பயலாளிகள் தெரிவு செய்யப்பட்டு. அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000/- வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,55.21,98,000/- அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும், என்று அறிவித்துள்ளனர்.

பிடித்தம் இல்லை: கடந்த முறை வங்கிகள் பெண்கள் கணக்கில் பணம் போடப்பட்டதும்.. அதை வங்கிகள் பிடித்தம் செய்தது. குறைந்தபட்ச பேலன்ஸ் என்று கூறி பணம் பிடிக்கப்பட்டது. அப்போதே மகளிருக்கு அளிக்கப்படும் உரிமைத் தொகையில் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.
மாநில அரசுக்கும், வங்கிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அதுகுறித்து 1100 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம், என்று அறிவித்தது.

இந்த நிலையில்தான் இந்த முறை மகளிர் உரிமை தொகையில் வங்கிகள் எவ்வித பிடித்தமும் செய்ய கூடாது என்று அரசு மீண்டும் வங்கிகளை அணுகி ஒப்பந்தம் செய்தது. இதனால் இந்த முறை அது போல நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. மகளிர் உரிமை தொகையை வங்கிகள் எவ்வித பிடித்தமும் செய்ய கூடாது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மீண்டும் வங்கிகளை அணுகி இருந்தார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை இரண்டாம் மாத தவணை வழங்கப்பட்டுவிட்டது. மணி ஆர்டர் மூலம் சிலருக்கு தாமதமாக பணம் வழங்கப்பட்டது. இரண்டாம் மாத தவணை அனுப்பப்பட்ட பின்பும் கூட.. இதுவரை யாருடைய கணக்கில் இருந்தும் பணம் எடுக்கப்படவில்லை. வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்று கூறி வங்கிகள் பணத்தை எடுக்கவில்லை. இதனால் பெண்கள் நிம்மதியாக உள்ளனர். இனிமேல் வரும் மாதங்களிலும் இதேபோல் வங்கிகளில் இருந்து பணம் எடுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications