இனி வங்கிகள் 5 நாட்கள் மட்டுமே செயல்படுமாம்! விரைவில் ஊழியர்களுக்கு வரும் குட்நியூஸ்! என்னாச்சு?

இந்தியாவில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் தற்போது ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து 2வது, 4வது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன. இந்நிலையில் தான் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில் வங்கிகளின் வேலை நாட்களை 5 ஆக குறைத்து ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து சனிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன. வங்கி ஊழியர்கள் சங்கத்தினரின் இந்த கோரிக்கையை கொள்கை ரீதியாக ஐபிஏ எனும் இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொண்டதாக கூறப்படும் நிலையில் விரைவில் அதற்கு ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் சாதாரண மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைவரும் வங்கிகளில் சேமிப்பை பின்பற்றி வருகின்றனர். ஒரு காலத்தில் வங்கியின் சேவையை பெற வேண்டும் என்றால் நாம் அனைவரும் வங்கிக்கு சென்று கால்கடுக்க காத்து நிற்க வேண்டி இருக்கும்.

ஆனால் தற்போது டிஜிட்டல் மய கொள்கையின் காரணம் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் என எதற்கும் நாம் வங்கிகளை நாடி செல்ல வேண்டியது இல்லை. இதனால் வங்கிகளுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை என்பது கணிசமாக குறைந்துள்ளது.

 வங்கிகள் விடுமுறை

வங்கிகள் விடுமுறை

இருப்பினும் கூட வங்கி கணக்கில் ஏதேனும் மாற்றம் செய்தல், பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை தீர்க்க அனைவரும் வங்கிக்கு கட்டாயம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. தற்போதைய சூழலில் அரசு விடுமுறையை வங்கிகளுக்கு அனைத்து வாரத்திலும் வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் 2வது, 4வது வார சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுகிறது. இதுதவிர அரசு விடுமுறை தினங்களிலும் வங்கிகள் செயல்படுவது இல்லை.

5 நாளாக குறைக்க கோரிக்கை

5 நாளாக குறைக்க கோரிக்கை


இந்நிலையில் தான் வங்கிகளின் வேலை நாட்களை 5 ஆக குறைக்க வேண்டும். அதாவது வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினரிடம் உள்ளது. இருப்பினும் இதுபற்றி எந்த இறுதி முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து 5 நாள் பணியை ஐபிஏ எனும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பிடம் வலியுறுத்தி வருகின்றன.

விரைவில் 2 நாள் விடுப்பு

விரைவில் 2 நாள் விடுப்பு

இந்நிலையில் தான் வங்கி ஊழியர்களின் கோரிக்கைக்கு விரைவில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இதுதொடர்பான கோரிக்கையை கொள்கை ரீதியாக இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வாரந்தோறும் வங்கி ஊழியர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

5 நாள் பணி நேரம் அதிகரிப்பு

5 நாள் பணி நேரம் அதிகரிப்பு

மாறாக அவர்கள் வாரந்தோறும் மீதமுள்ள 5 நாட்களிலும் வழக்கத்தை விட 50 நிமிடங்கள் வரை கூடுதலாக பணி செய்ய வேண்டும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இந்திய வங்கிககள் கூட்டமைப்புக்கும் யுஎப்பிஇ எனும் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் அமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்றுக்கொள்ள கோரிக்கை

ஏற்றுக்கொள்ள கோரிக்கை

இதுதொடர்பாக அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் நாகராஜன் கூறுகையில், ‛‛இது வங்கி பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும் Negotiable Instruments Act 25வது பிரிவின் கீழ் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும். இதனை ரிசர்வ் வங்கியும் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.

மார்ச்சில் 12 நாள் விடுப்பு

மார்ச்சில் 12 நாள் விடுப்பு

இது ஒருபுறம் இருக்க இந்த மாதம்வங்கி மொத்தம் 12 நாட்கள் விடுமுறையாகும். 2வது 4வது சனிக்கிழமை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு வழக்கமாக விடுமுறை நாளாகும். இதுதவிர இந்த மாதத்தில் ஹோலி, சைத்ரா நவராத்திரி, ராமநவமி உள்ளிட்ட சில பண்டிகைகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் இந்த மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+