தங்க முறைகேடு.. போலி நகைகளை நம்பி 23 கோடி ரூபாய் லோன்.. தனியார் வங்கியில் அரங்கேறிய பகீர் மோசடி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பிரபல தனியார் வங்கி கிளைகளில் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.23 கோடி சுருட்டிய விவகாரம் வங்கி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் என்றாலே தமிழர்களுக்கு ஒரு தனி சென்டிமென்ட் உண்டு. ஆனால், அதே தங்கத்தை வைத்து ஒரு கூட்டமே திட்டமிட்டு வங்கியை ஏமாற்றிய சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாக்பூரில் உள்ள பிரபல தனியார் வங்கியின் 9 வெவ்வேறு கிளைகளில் இந்த 'பகீர்' மோசடி அரங்கேறியிருக்கிறது.

gold rate

மாட்டிக்கொண்ட 159 பேர்!

வழக்கமான வங்கி தணிக்கையின் (Internal Audit) போதுதான் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. வங்கியின் 'கோல்ட் லோன்' போர்ட்ஃபோலியோவை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் தங்கம் இல்லை என்பதும், அவை அனைத்தும் தரம் குறைந்த போலி உலோகங்கள் என்பதும் தெரியவந்தது.

சுமார் 159 கணக்குதாரர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி 2023 முதல் அக்டோபர் 2025 வரையிலான காலகட்டத்தில், கொஞ்சம் கொஞ்சமாக இந்த போலி நகைகளைத் தந்து சுமார் 23 கோடி ரூபாயை கடனாகப் பெற்று ஜாலியாகச் சுருட்டியிருக்கிறார்கள்.

உள்ளடி வேலை இல்லாமல் இது சாத்தியமா?

பிரபல தனியார் வங்கியின் மண்டல அலுவலக ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பிரபல தனியார் தான்தோலி (Dhantoli) போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இங்குதான் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. பொதுவாக வங்கியில் நகைக்கடன் வாங்கும் போது, வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட 'நகை மதிப்பீட்டாளர்கள்' (Valuers) அந்த நகையின் தரத்தை உறுதி செய்த பின்னரே கடன் வழங்கப்படும். அப்படியிருக்கையில், ஒன்பது கிளைகளில் இவ்வளவு பெரிய தொகையை மதிப்பீட்டாளர்களின் 'க்ரீன் சிக்னல்' இல்லாமல் எப்படிப் பெற முடியும்?

இதனால் வங்கியின் உயரதிகாரிகள் அல்லது நகையைச் சரிபார்க்கும் ஊழியர்களுக்கு இந்த மோசடி கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது. "வேலியே பயிரை மேய்ந்ததா?" என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்த பிரம்மாண்டமான மோசடியை அரங்கேற்ற ஒரு தனிப்பட்ட 'சிண்டிகேட்' குழுவே மிக கச்சிதமாக களம் இறங்கியுள்ளது. பொதுவாக வங்கிக்கு யாராவது நகைக்கடன் வாங்க வந்தால், வங்கியால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நகை மதிப்பீட்டாளர்கள் (Valuers) அந்த நகையை உரசிப் பார்த்து, அதன் தூய்மையைச் சான்றிதழ் அளித்த பின்னரே மேலாளர் கடனை அனுமதிப்பார்.

ஆனால் இந்த வழக்கில், வங்கியின் நம்பிக்கைக்குரிய தூண்களாக இருக்க வேண்டிய அந்த மதிப்பீட்டாளர்களே (7 பேர்) இந்தச் சதியில் முக்கிய மூளையாகச் செயல்பட்டுள்ளனர். சுமார் 152 போலி வாடிக்கையாளர்களைத் தயார் செய்து, அவர்களிடம் செப்பு அல்லது இதர உலோகங்கள் கலந்த போலி நகைகளைக் கொடுத்து, அவை "தங்கம்தான்" எனப் பொய் சான்றிதழ் வழங்கி இந்த மோசடிக்கு 'க்ரீன் சிக்னல்' காட்டியுள்ளனர்.

இப்படி ஜனவரி 2023 முதல் அக்டோபர் 2025 வரை ஒன்பது கிளைகளிலும் ஒரே மாதிரியான தந்திரத்தைப் பயன்படுத்தி, சுமார் 159 பாக்கெட்டுகளில் போலி நகைகளை வங்கியின் லாக்கருக்குள் தள்ளிவிட்டு, 23.19 கோடி ரூபாய் பணத்தை வெளியே எடுத்துள்ளனர். வங்கியின் உள் தணிக்கையில் (Audit) ஒரு சில பாக்கெட்டுகளைத் திறந்து பார்த்தபோதுதான், பல ஆண்டுகளாக அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி இந்தத் திட்டமிட்ட கொள்ளை நடந்தது அம்பலமாகியுள்ளது.

வங்கி தரப்பு விளக்கம்

தற்போது அந்த 159 கணக்குதாரர்களின் பட்டியலை வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளதுடன், தீவிர விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சாமானிய மக்கள் ஒரு சிறு நகைக்கடன் வாங்கச் சென்றாலே ஆயிரம் கேள்விகள் கேட்கும் வங்கிகள், கோடிக்கணக்கில் கடன் கொடுக்கும்போது கோட்டை விட்டது எப்படி என்பதுதான் இப்போது நாக்பூர் ஏரியாவின் ஹாட் டாபிக்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+