பேங்க் ஆப் பரோடா கஸ்டமர்கள் ஷாக்! அக்கவுண்ட்டில் எகிறிய இஎம்ஐ தொகை! வீட்டுக்கடன் வாங்கியவர் திகைப்பு
சென்னை: வங்கி வாடிக்கையாளர்களுக்கு தூக்கத்தைக் கெடுக்கும் ஒரு ஷாக் நியூஸ் வெளியாகியுள்ளது.. பிரபல பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் கணினி அமைப்பில் திடீர்னு கோளாறு ஏற்பட்டுவிட்டதாம்.. இதனால் வீட்டுக்கடன் வாங்கிய பல கஸ்டமர்கள் இந்த மாதம் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.. என்ன நடந்தது?
பேங்க் ஆப் பரோடா'வின் கணினி கோளாறு காரணமாக, வீட்டுக்கடன் பெறுபவர்கள் இந்த மாதம் வழக்கமான இ.எம்.ஐ.யை விட அதிக தொகை வசூலிக்கப்பட்டு, தவறுதலாக வட்டி விகிதம் அதிகமாக கணக்கிடப்பட்டது..

இதனால் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளில் இருந்து அனுமதியின்றி கூடுதல் பணம் பிடிக்கப்பட்டு, கணக்கில் போதிய தொகை இல்லாதவர்கள் கடன் திருப்பி செலுத்தாதவர்களாக வகைப்படுத்தப்பட்டதால் அவர்களின் கடன் தரமதிப்பீடும் பாதிக்கப்பட்டுள்ளது.. மேலும் சிலருக்கு நிலுவை தொகையை வசூலிக்க தனியார் முகவர்கள் நெருக்கடியும் ஏற்படுத்தியுள்ளனர்..
பேங்க் ஆப் பரோடா
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், அக்கவுண்ட்டில் போதிய பணம் இல்லாத வாடிக்கையாளர்கள் கடனை சரியாகத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்றெல்லாம் தப்பு தப்பாக கணக்கிடப்பட்டுள்ளனர்.. இதனால் அவர்களின் கடன் தரமதிப்பீடு எனப்படும் சிபில் ஸ்கோர் சர்ரென கடுமையாக சரிந்துவிட்டது.
அதுமட்டுமல்ல, நிலுவை தொகையை செலுத்துமாறு கடன் வசூல் செய்யும் தனியார் ஏஜென்டுகள் சில வாடிக்கையாளர்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து மிரட்டியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன..
பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைப் பார்த்தால் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது புரியும்.. புனேவைச் சேர்ந்த ஒரு கஸ்டமரின் வழக்கமான மாதத் தவணை 98,953 ரூபாய் மட்டுமே.. ஆனால் வங்கித் தரப்போ, கூடுதலாக 57,290 ரூபாயை செலுத்துமாறு அவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.. தன்னுடைய கடன் தரமதிப்பீடு பாழாகிவிடக் கூடாது என்பதற்காக, வேறு வழியில்லாமல் அந்தப் பெரிய தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளார்..
அக்கவுண்ட்டில் எகிறிய தொகை
இதுமட்டுமன்றி, டூவீலர் லோனை முழுமையாகக் கட்டி முடித்த ஒருவரிடம் இருந்தும் 33,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக இணையத்தில் புகார்கள் எழுந்துள்ளன..
இந்த விவகாரம் குறித்து பேங்க் ஆப் பரோடா நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.. அதில், "குறிப்பிட்ட சில கணக்குகளில் மட்டுமே இந்தத் தவறு நடந்திருப்பதாகவும், வங்கியின் வழக்கமான கணக்குச் சரிபார்ப்புப் பணியின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வங்கி கூறியுள்ளது..
வீட்டுக் கடன் வாங்கியவர்கள் திகைப்பு
வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் மீண்டும் அவர்களின் கணக்கிலேயே திருப்பிச் செலுத்தப்பட்டு வருவதாக வங்கி உறுதியளித்துள்ளது.. அதேபோல, கணினித் தவறால் யாருக்காவது வட்டி குறைவாகப் போடப்பட்டிருந்தால், அவர்களிடம் இருந்து மீதித் தொகை வசூலிக்கப்பட்டுவிட்டதாகவும் வங்கி தெரிவித்துள்ளது..
எனினும், பேங்க் ஆப் பரோடா வங்கியின் மொத்தக் கடனில் சுமார் 11 சதவீதம், அதாவது கிட்டத்தட்ட 1.44 லட்சம் கோடி ரூபாய் வீட்டுக்கடன்களாகத் தரப்பட்டுள்ளது.. இது வங்கியின் மொத்தச் சில்லறைக் கடன்களில் சரிபாதியாகும்.. இவ்வளவு பெரிய வங்கிக் கட்டமைப்பில் ஏற்பட்ட இந்த டெக்னிக்கல் தவறு, சாமானிய வாடிக்கையாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.. வங்கியின் தவறால் குறைந்த சிபில் ஸ்கோர் மீண்டும் பழைய நிலைக்கு வருமா என்பதே இப்போது பலரின் கேள்வியாக உள்ளது..
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications