சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 வங்கிகள் இணைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு.. ஊழியர்கள் இன்று போராட்டம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா சீதாராமன் அதிரடி | Nirmala Sitharaman Pressmeet

    சென்னை: 10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு இனி 4 வங்கிகளாக இயங்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுத் துறை வங்கி தலைவர்களை சந்தித்த பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யூனைடெட் வங்கி ஆகியன இணைக்கப்படும். இதனால் 17.5 லட்சம் கோடி ரூபாய் வணிகத்துடன் பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்து நாட்டின் 2-ஆவது பெரிய பொதுத் துறை வங்கியாக இது செயல்படும்.

    3 நாட்கள் தொடர் விடுமுறை.. கூட்ட நெரிசலால் சிக்கி தவித்த சென்னை கோயம்பேடு3 நாட்கள் தொடர் விடுமுறை.. கூட்ட நெரிசலால் சிக்கி தவித்த சென்னை கோயம்பேடு

    ஒன்றரை மடங்கு

    ஒன்றரை மடங்கு

    தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி அளவைவிட ஒன்றரை மடங்கு பெரியதாகும். இந்த இணைப்பின் மூலம் 11,437 கிளைகளை கொண்ட நெட்வொர்க்காக இவை மாறும். அது போல் கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகியன ஒன்றிணைக்கப்படுகிறது.

    பெரிய நெட்வொர்க்

    பெரிய நெட்வொர்க்

    நாட்டின் 3-ஆவது பெரிய நெட்வொர்க் வங்கியாக இது மாறும். இதையடுத்து யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகிய மூன்றும் இணைக்கப்படும். இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கியுடன் இணையும். இந்த இணைப்பின் மூலம் 7வது பெரிய நெட்வொர்க்காக மாறும்.

    வங்கிகள் கடன்

    வங்கிகள் கடன்

    2017-ஆம் ஆண்டு 27 பொதுத் துறை வங்கிகள் இருந்தன. நேற்றைய அறிவிப்புக்கு பின்னர் நாட்டில் மொத்தம் 12 பொதுத் துறை வங்கிகள்தான் இருக்கும். இது போல் வங்கிகள் இணைக்கப்படுவதால் வங்கிகள் கடன் கொடுக்கும் அளவு அதிகரிக்கும்.

    வங்கி ஊழியர்கள் சங்கம்

    வங்கி ஊழியர்கள் சங்கம்

    நெட்வொர்க் அதிகரிக்கும், வங்கி, வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள் என அனைத்து தரப்புக்கும் இதனால் நன்மை கிடைக்கும் என்றார் நிர்மலா சீதாராமன். வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் இன்று நடைபெறும் என இந்திய வங்கி ஊழிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    மெகா இணைப்புகளோ

    மெகா இணைப்புகளோ

    இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்கம் கூறுகையில் மெகா வங்கிகளோ மெகா இணைப்புகளோ எங்களுக்கு தேவையில்லை. இந்த நாட்டில் லட்சக்கணக்கான கிராம மக்களுக்கு வங்கி வசதிகள் சேவை இல்லை. வங்கி இணைப்பு தொடர்பான அறிவிப்புகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். வங்கிகள் இணைப்பு அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

    English summary
    Bank staff association opposes for bank merger and they will indulge in protest against centre today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X