ஏப்ரல் 1 முதல் மாறிய வங்கி ரூல்ஸ்! ₹10 லட்சம் வரை அனுப்ப யாருக்கு அனுமதி? கூகுள்பே பயனர்களுக்கு ஷாக்
சென்னை: வங்கி ரூல்ஸ் ஏப்ரல் 1 முதல் மாறியிருக்கிறது.. காரணம், இந்தியாவில் ஆன்லைன் மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உயர்ந்துள்ளது.. மக்களின் வசதிக்காகப் பல்வேறு புதுசு புதுசாக டெக்னாலஜி வந்தாலும், அதற்கேற்ப ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.. இதனைத் தடுக்கவும், மக்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியான புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதை பற்றிதான் இங்கே பார்க்க போகிறோம்.
2026 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆர்பிஐ-யின் நாடு புதிய விதிமுறைகள் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன.. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிமையாகவும் அதே சமயம் மிகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதே இந்த விதிகளின் முக்கிய நோக்கமாகும்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள்
புதிய விதிகளின்படி, இனிமேல் எல்லா டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கும் Two-Factor Authentication அதாவது டபுள் அடுக்கு பாதுகாப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இதுவரை பல இடங்களில் ஒரு முறை பயன்படுத்தும் ஓடிபி மட்டுமே போதுமானதாக இருந்தது..
ஆனால் இனிமேல் வெறும் ஓடிபி மட்டும் போதாது, அதனுடன் கூடுதலாக உங்களின் பின் நம்பர் அல்லது கைரேகை போன்ற இன்னொரு பாதுகாப்பு முறையையும் பயன்படுத்தினால் மட்டுமே பணம் அனுப்ப முடியும்.. இது பரிவர்த்தனைக்கு கொஞ்ச நேரம் கூடுதலாக எடுத்தாலும், உங்கள் பர்மிஷன் இல்லாமல் வேறு யாராவது உங்கள் பணத்தை திருடுவதை முழுமையாக தடுக்க உதவும்..
யுபிஐ ஆப்-களான கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்றவற்றை பயன்படுத்துவோருக்கு சில முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. இனிமே ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே உங்கள் கணக்கில் உள்ள பணத்தை சரிபார்க்க முடியும்.. இதற்கு மேல் சரிபார்க்க முயன்றால் அனுமதி மறுக்கப்படும்.
ரூ.10 லட்சம் வரை யுபிஐ மூலம் அனுப்பலாம்
அதேபோல மாதந்தோறும் தானாகவே பணம் கழியும் ஆட்டோ-பே வசதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.. கடன் தவணைகள், சந்தா கட்டணங்கள் இனி இரவு 9:30 மணி முதல் காலை 10:00 மணிக்குள் நடைபெறும் வகையில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.. இதன் மூலம் கஸ்டமர்கள் தங்கள் கணக்கில் போதுமான பணம் இருப்பதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள முடியும்..
பணப் பரிவர்த்தனை வரம்புகளை பொறுத்தவரை, சாதாரண தனிநபர் பரிவர்த்தனைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற வரம்பு தொடர்கிறது.. ஆனால் கல்வி கட்டணம், மருத்துவச் செலவுகள், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற முக்கியமான தேவைகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை யுபிஐ மூலம் அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..
செக்யூரிட்டி சோதனைகள்
அதுமட்டுமல்ல, புதிதாக யுபிஐ கணக்கு தொடங்குபவர்கள் முதல் 24 மணிநேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகபட்சமாக 5,000 ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும் என்ற விதியும் அமலில் உள்ளது..
கஸ்டமர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மோசடி காரணமாக பணத்தை இழந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது பணப் பரிவர்த்தனை நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது..
நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் செல்போன் தவிர வேறு ஒரு புதிய சாதனத்தில் இருந்து பணத்தை அனுப்ப முயற்சிக்கும்போது, கூடுதல் செக்யூரிட்டி சோதனைகள் செய்யப்படும். இது மோசடி செய்பவர்கள் உங்கள் கணக்கை திருடுவதை தடுக்கும்.. இந்த அனைத்து மாற்றங்களும் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பயமில்லாமல் பணப் பரிவர்த்தனை செய்யப் பெரிதும் உதவும்..!!!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications