கூகுள் பே உள்ளிட்ட UPIகளில் பணம் அனுப்புறீங்களா? வருகிறது புதிய ரூல்ஸ்.. வங்கிகள் எடுத்த முடிவு
சென்னை: ₹100-க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு SMS அறிவிப்புகளை அனுப்புவதை நிறுத்த வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) அனுமதி கோரியுள்ளன. கூகுள் பே உள்ளிட்ட UPIகளில் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளின் அதிகரிப்பு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் மெசேஜ்கள் குவிந்து, சோர்வை ஏற்படுத்துவதாக வங்கிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பலர்க்கு 10 ரூபாய், 20 ரூபாய் transactionsகளுக்கு மெசேஜ் செல்கிறது. இதனால் சில சமயங்களில், பெரிய பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான மெசேஜ்களை வாடிக்கையாளர்கள் தவறவிடுகின்றனர் . "பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுடன் உள் ஆலோசனைகளை நடத்திய பிறகு கடந்த மாதம் இந்த கோரிக்கையை முன்வைத்தோம். இதை ஆர்பிஐ ஏற்றுக்கொள்ளும் சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சிக்கல் RBI-யிடம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் மோசடிகளைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளின் பட்டியலையும் நாங்கள் சமர்ப்பித்துள்ளார்கள். இதனால் பணம் பாதுகாப்பாக இருக்குமா என்று அஞ்ச வேண்டியது இல்லை. சிறிய பரிவர்த்தனைகள் ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது எண்ணிக்கையை மீறினால் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும். 100 ரூபாய்க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு
SMS செய்திகள் தானாகவே அனுப்பப்படும், அதேசமயம் மின்னஞ்சல் அறிவிப்புகள் அதைத் தேர்வுசெய்தவர்களுக்கு மட்டுமே செல்லும். ₹100 வரை உள்ள சிறிய மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு அறிவிப்புகளைப் பெற வேண்டாம் என்று தேர்வுசெய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
அவர்கள் அறிவிப்புகளைப் பெற விரும்பினால், வங்கி செயலிகள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் அவற்றைப் பெறலாம். ஒரு SMS அனுப்புவதற்கு சுமார் ₹0.20 செலவாகும. இந்த செலவு பொதுவாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது, இருப்பினும் சில வங்கிகள் இந்த செலவை தாங்களாகவே ஈடுகட்டுகின்றன.
மின்னஞ்சல் அறிவிப்புகள் இலவசம். தொழில்நுட்பத்தை திறமையாகப் பயன்படுத்தவும், உண்மையான பயன்பாட்டிற்கு மட்டுமே வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லோன் விதிகளை தளர்த்த முடிவு
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் புரிவதை எளிதாக்குவதற்கும், வங்கிகளின் செலவுகளைக் குறைப்பதற்கும் உதவும் வகையில் 22 புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. ஆர்பிஐ அறிவித்துள்ள இந்த விதிகள் வீட்டு லோன் தொடங்கி பலவற்றில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய விதிப்படி ஒரு நிறுவனத்திற்கு வங்கி அமைப்பு வழங்கும் ₹10,000 கோடி கடன் உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கி சார்ந்த கட்டுப்பாடுகள் தொடரும். அதாவது ஒரு நிறுவனத்திற்கு ஒரு வங்கி ஒரே கையெழுத்தில் 10 ஆயிரம் கோடி கடன் வழங்க முடியும். வங்கிகள் வேண்டுமானாலும் இதற்கு எதிராக விதி கொண்டு வரலாம். ஆனால் இதுவரை இருந்து வந்த ஆர்பிஐ விதி இனி இருக்காது.
ஒரு வங்கியின் மொத்த கடனில், ஒரு குறிப்பிட்ட கடன் வாங்குபவருக்கு அதன் நிகர மதிப்பில் 20 சதவீதமும், ஒரு குழுமத்திற்கு 25 சதவீதமும் மட்டுமே வழங்க முடியும். கடந்த பத்தாண்டுகளில் கார்ப்பரேட் துறைகளுக்கான வங்கிக் கடன்கள் 10 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்கும் நிதி அல்லாத வங்கிகள் (NBFCs) மீதான இடர் எடைகளைக் குறைப்பதன் மூலம் உள்கட்டமைப்பு நிதி செலவைக் குறைக்கவும் மத்திய வங்கி முன்வந்துள்ளது. பங்குகள், ஆரம்பப் பொதுப் பங்குகள் (IPOs) உட்பட, முதலீடு செய்ய கடன் வாங்குபவர்களுக்கான கடன் வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு
பங்குகளை அடமானம் வைத்து வங்கிகள் வழங்கும் கடன்களின் வரம்பை ₹20 லட்சத்தில் இருந்து ₹1 கோடியாகவும், IPO நிதி வரம்பை ₹10 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாகவும் உயர்த்த ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது.
பூடான், நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்க வங்கிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் வீட்டு லோன்களை அதிகம் வழங்கவும் ஊக்குவிக்கும் வகையில் விதிகளை தளர்த்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications