Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த வாரம் ஊழியர்கள் வேலைநிறுத்தம்.. தொடர் விடுமுறையால் வங்கிகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு வரையிலும் என 48 மணி நேரம் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன.இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 8 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாரத்தில் 5 நாள் மட்டும் வேலை என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பணித்திறன் ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும், பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள், இயக்குனர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மார்ச் 24 மற்றும் 25-ந் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தன.

Banks at risk of being closed for 4 days due to employee strike and continuous holidays


9 வங்கி ஊழியர் சங்கங்களின் உயரிய அமைப்பான வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தப் போராட்ட நோட்டீஸை அறிவித்து இருந்தது. இதையடுத்து இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது.

இதன்படி அண்மையில் பேச்சுவார்த்தையும் நடந்தது.. அந்த பேச்சுவார்த்தையின்போது, வாரத்தில் 5 நாள் வேலை, பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு முன்வைத்தது. ஆனால் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வங்கிகள் சங்கம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வங்கிகள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அறிவித்த ஊழியர்கள், போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவித்தனர்.

ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எல்.சந்திரசேகர் அண்மையில் இதுபற்றி கூறும்போது,திட்டமிட்டபடி, 24 மற்றும் 25-ந் தேதிகளில் நாடு தழுவிய 2 நாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் நடைபெறும் என்றும் என்று கூறினார். அதன்படி வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் 25-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு வரையிலும் என 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள். இந்த வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 8 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரூபம் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க முன்வராததால் வேலைநிறுத்த போராட்டத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம். சிரமம் ஏதேனும் ஏற்பட்டால், அதனை பொறுத்துக்கொண்டு எங்களுடைய வேலைநிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறி உள்ளார்.

வங்கிகளுக்கு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை ஆகும். அந்தவகையில், 4-வது சனிக்கிழமை வருகிற 22-ந்தேதி வருகிறது. அதற்கு அடுத்த நாளான 23-ந்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாட்கள் ஆகும். இதற்கு அடுத்த 24, 25-ந்தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் தொடர்ச்சியாக வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல வங்கி சேவைகளை பெறுவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு வங்கி ஊழியர் சங்கங்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டிருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+