நாளை முதல்.. வரிசையாக லீவுதான் வங்கிகளுக்கு.. வேலைகளை முன்கூட்டியே முடித்து கொள்ளவும்
சென்னை: நவராத்திரி கொண்டாட்டத்தையொட்டி வரும் 12ம் தேதி அதாவது நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
பொது மற்றும் தனியார் வங்கிகள் இந்த காலகட்டங்களில் மூடப்படும். பண்டிகை காலத்தில் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு பரிசுகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

வேலைகள்
இந்த நேரத்தில்தான் வங்கிகளுக்கு விடுமுறையும் விடப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வங்கி தொடர்பான வேலைகள் இருந்தால், உங்கள் மாநிலத்தில் என்று விடுமுறை தினம் இல்லையோ அதை பார்த்து வங்கி வேலையை முடித்துக் கொள்ளவும். இந்த விடுமுறை தினங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகின்றன.

விடுமுறை தினங்கள்
இதோ விடுமுறை தினங்கள் குறித்த ஒரு பார்வை:
அக்டோபர் 12 - மஹா சப்தமி திரிபுரா, கர்நாடகா, மேற்கு வங்கத்தில் விடுமுறை.
அக்டோபர் 13 - மஹா அஷ்டமி திரிபுரா, ஒடிசா, சிக்கிம், அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் விடுமுறை.

ஆயுத பூஜை
அக்டோபர் 14 - துர்கா பூஜை/தசரா (மகா நவமி)/ஆயுத பூஜை - தமிழகம், கர்நாடகா, திரிபுரா, கேரளா, அசாம், உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் விடுமுறையாகும்.

விஜயதசமி
அக்டோபர் 15 - துர்கா பூஜை/தசரா/விஜய தசமி இமாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை. இவ்வாறு ரிசர்வ் வங்கி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஆன்லைன் சேவைகள்
வங்கிகளுக்கு தொடர்ந்து விடுமுறை இருந்தபோதிலும், வங்கி பணிகள், பண பரிவர்த்தனை உள்ளிட்டவற்றில் ஆன்லைன் தவிர்த்த பிற பணிகளில் மட்டும் இடையூறுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆன்லைன் சேவைகள், ஏடிஎம் பயன்பாட்டில் பிரச்சினை ஏற்படாது என்று ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி
தசராவை ஒட்டிய விடுமுறை தினங்கள் மட்டுமல்ல, அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை, ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. அதை கூட்டி கழித்து பார்த்தால் 21 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. இருப்பினும் எல்லா மாநிலங்களுக்கும் எல்லா விடுமுறையும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications