அண்ணாமலை பேசுவதை நினைத்தால் சிரிப்பு வருது... கிண்டல் செய்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை..!
சென்னை: மேகேதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவதை நினைத்தால் தமக்கு சிரிப்பு வருவதாக கூறியிருக்கிறார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.
மேலும், அண்ணாமலை நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை பற்றி தாம் கண்டுகொள்ளப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேகேதாது அணை தொடர்பாக தமிழக பாஜக மற்றும் கர்நாடக பாஜக இடையே ஏற்பட்டுள்ள வார்த்தைப்போர் அக்கட்சியின் டெல்லி மேலிடத்தை கவலைக் கொள்ளச்செய்துள்ளது.

மேகேதாது அணை
காவிரியின் குறுக்கே மேகே தாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வரும் வேளையில், அதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை கர்நாடகாவுக்கு வழங்கக் கூடாது என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

உறுதி
இந்நிலையில் மேகேதாது அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசு, இந்த விவகாரத்தில் சமரசத்திற்கே இடமில்லை என கூறி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவும் சரி தற்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் சரி மேகேதாது அணையை கட்டுவதில் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நிலைப்பாடு
இதனிடையே தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மேகேதாது அணை தொடர்பாக ஆலோசித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட அனுப்பி வைத்தார். இந்த விவகாரத்தில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்னவென்பது மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. அடுத்தடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு அண்ணாமலை செயல்படத் தொடங்கியிருக்கிறார்.

கவலையில்லை
இதனால் மேகேதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிடக் கோரி தஞ்சாவூரில் அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டம் கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதலவர் பசவராஜ் பொம்மை, I don't care about annamalai protest எனக் கூறியிருக்கிறார். மேலும், புதிய அணை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவதை நினைத்தால் தமக்கு சிரிப்பு வருவதாக தெரிவித்திருக்கிறார்.

மாநில உரிமை
மேகேதாதுவில் புதிய அணை கட்டுவதென்பது தங்கள் மாநில உரிமை என்றும் இதில் தமிழகத்தில் போராட்டம் நடத்துபவர்களை பற்றி பொருட்படுத்த தேவையில்லை எனவும் கர்நாடக முதல்மவர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். இதனிடையே இரு மாநில பிரச்சனைகளை சுமூகமாக கையாள்வது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications