பவாரியா கேங் ஜெயில்தார் சிங், கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளியா? - நாளை அறிவிக்கிறது நீதிமன்றம்!
சென்னை: கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் கைதான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. பவாரியா கும்பலைச் சேர்ந்த ஜெயில்தார் சிங் குறித்தும் நாளை உத்தரவிடப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 1995 முதல் 2005 ஆம் ஆண்டு வரை, பவாரியா கொள்ளை கும்பல் அட்டூழியம் செய்து வந்தது. பல இடங்களில் பல நாட்களாக நோட்டமிட்டு நேரம் பார்த்து நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளை அடிப்பதோடு, கொடூரமாக கொலையும் செய்வது பவாரியா கும்பலின் பாணி.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள சுதர்சனம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 5 பேர் கும்பல் சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கிவிட்டு 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது.
அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கொள்ளையர்களை சுட்டுப் பிடிக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்ட தனிப்படை போலீசார் அடுத்த ஒரு மாதத்திலேயே கொள்ளையர்கள் கண்டுபிடித்தனர்.
அதில் முக்கிய குற்றவாளியை அதே ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மார்ச் மாதத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய ஹரியானா, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவாரியா கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தனிப்படை போலீசார் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்ளிட்ட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டனர்.
மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேருக்கு எதிரான வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தார். வழக்கில் 86 பேர் காவல்துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், ஜெயில்தார் சிங் மற்றும் குற்றவாளிகள் மீதான தண்டனை விவரம் நவம்பர் 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். சேலம் காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன் வீட்டில் நடந்த பவாரியா கும்பலின் கொலை கொள்ளை வழக்கில் ஜெயில்தார் சிங் கைது செய்யப்பட்டிருந்தார். சுதர்சனம் கொலை வழக்கிலும் ஜெயில்தார் சிங் சேர்க்கப்பட்டார்.
ஆசிரியரான ஜெயில்தார் சிங், பவாரியா கும்பல் தலைவரான ஓம் பிரகாஷின் மருமகன். தமிழ்நாட்டில் கொள்ளையடித்துக் கொண்டு சென்று கொடுக்கும் நகைகளை விற்பனை செய்து, அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கும் வேலையை இவர்தான் செய்து வந்தார் என போலீசார் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications