Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீச்சில்.. கும்மிருட்டில் ஒதுங்கிய ஜோடி.. டக்குனு திரும்பினால்.. மொத்தம் "6 கண்கள்".. ஓ மை காட்

நீலாங்கரை கடற்கரைகளில் கொள்ளை அடித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரினாவை தொடர்ந்து நீலாங்கரை பீச்சில் நடக்கும் சம்பவங்கள், சென்னைவாசிகளை கலங்கடித்து வருகிறது.. அந்தவகையில், தற்போது 2 கொள்ளையர்களை 4 நாட்கள் கழித்து போலீசார் தட்டி தூக்கி உள்ளனர்.
எவ்வளவுதான் போலீசார் விழிப்பாக இருந்தாலும், கொள்ளை, வழிப்பறி குற்றங்கள் சென்னையில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.. அதிலும் மெரினா, பெசன்ட்நகர், நீலாங்கரை பீச்களில் இந்த வழிப்பறிகள் அதிகமாகி வருகின்றன.

4 நாட்களுக்கு முன்பு, ஒரு கொள்ளை சம்பவம் நீலாங்கரை பீச்சில் நடந்தது.. அந்த இளைஞர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர்.. 25 வயதாகிறது..

இவர் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில், நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள பீச்சில் தன்னுடைய காதலியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்..

"போன் பே"

அந்த இடம் இருள் சூழ்ந்த பகுதியாகும்.. இவர்கள் 2 பேர் மட்டும் இருட்டில் இருந்ததை 3 பேர் மறைவாக நின்று கவனித்தபடியே இருந்திருக்கிறார்கள்.. பிறகு, திடீரென காதலர்களை சூழ்ந்து கொண்டனர். பாக்கெட்டுகளில் இருந்து கத்தியை எடுத்து, காதலர்களை மிரட்டி பணத்தை கேட்டனர்.. பிறகு, அவர்கள் கையில் வைத்திருந்த பைகளை பிடுங்கி கொண்டனர்.. ஆனால், இருவரது பையிலும், பணம் எதுவும் இல்லை.. இதனால், 3 பேருமே ஆத்திரமடைந்து, காதலர்களின் செல்போனை பிடுங்கி கொண்டனர்.. அதில் ஆன்லைன் டிரான்ஸாக்‌ஷன் இருக்கிறதா என்று பார்த்துள்ளனர்..

 டிரான்ஸ்சேக்‌ஷன்

டிரான்ஸ்சேக்‌ஷன்

ஏடிஎம்மில் பணம் இருந்ததை பார்த்து, 40,000 ரூபாயை உடனே தங்களது அக்கவுண்ட்டுக்கு 3 பேரும் "போன் பே" செய்து கொண்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.. பாதிக்கப்பட்ட முகமது உசேன் இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் தந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களின் வங்கி கணக்கை தீவிரமாக தேடி வந்தனர்.. குற்றப்பிரிவு ஆய்வாளர் புகழேந்தி, உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ராஜதுரை ஆகியோர் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது..

பள்ளிக்கரணை

பள்ளிக்கரணை

பிறகு, காதலர்களிடம் பணம் பறித்தவர்களின் வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தப்பட்டது.. அப்போதுதான் அந்த 3 பேருமே சிக்கினார்கள்.. பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த ஊசி உதயா (எ) உதயகுமார் 25, விக்கி (எ) விக்னேஷ் 27, ஆகிய 2 பேர் தங்களது கூட்டாளியுடன் சேர்ந்து, பணம் பறித்தது தெரிந்தது... அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்துவிட்டனர்.. கைதான 2 பேர் மீதும் பள்ளிக்கரணை மற்றும் நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷன்களில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

 காதல் ஜோடி

காதல் ஜோடி

பிறகு, 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளி தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இரவு 8 மணிக்கு மேல், இருள் சூழ்ந்த இடத்தில், பெரும்பாலான காதலர்கள் தனிமையில் வந்து உட்காருவார்களாம்.. அவர்களிடமும் இந்த கும்பல் பலமுறை கைவரிசை காட்டி உள்ளது.. பணம், நகைகளை இழந்தவர்கள் போலீசுக்கு போகாமல் இருந்துள்ளனர்.. இந்த இடத்துக்கு புதிதாக வரும் காதல்ஜோடிகள், இதே இடத்தில் அடுத்தடுத்து வந்து உட்காருவது, கொள்ளை கும்பலுக்கு வசதியாக இருந்து வருவதாக சொல்கிறார்கள்.

 பீச் பீச்

பீச் பீச்

கைதானவர்களை தவிர, இதுபோல வேறு சில கொள்ளை கும்பல்களும் பீச்களில் இதே வேலையாக சுற்றி திரிவதாகவும், காதலர்களிடம் இதுபோன்று கத்தி முனையில் பணம் பறிக்கும் செயல் அதிகளவில் இப்பகுதியில் அரங்கேறி வருவதாகவும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் ரோந்து போலீஸ் அல்லது கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.. கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினா பீச்சில் இதே போன்ற ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை போலீசார் கைது செய்திருந்த நிலையில், நீலாங்கரை பீச் கொள்ளை சம்பவத்தில் 4 நாட்களில் குற்றவாளிகள் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+