மின்சார ரயில் ரத்து.. கை கொடுக்க வந்த சென்னை மெட்ரோ.. வழக்கத்தை விட கூடுதல் சேவை.. டைமிங் இதுதான்!
சென்னை: சென்னையில் இன்று 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு, இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புறநகர் ரயில்களை சென்னையில் பயணிகள் பயன்படுத்துகிறார்கள். போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளாமல் சரியான நேரத்தில் நினைத்த இடத்திற்கு சென்று விடமுடியும் என்பதால் புறநகர் மின்சார ரயில்கள் சென்னையில் பயணிகளுக்கு பெரிதும் கை கொடுக்கிறது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம்- செங்கல்பட்டு வரையிலும் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். விடுமுறை நாட்களில் கூட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். புறநகர் ரயில்களை பொறுத்தவரை தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
44 மின்சார ரயில் சேவைகள் ரத்து: அந்த வகையில் சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை, காஞ்சிபுரம் - கடற்கரை, திருமால்பூர் - கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் சேவை நேற்று முதல் 6 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. அதே போல் நேற்று முதல் 22 ஆம் தேதி வரை இரவு 10.45 மணி முதல் காலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை: கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.15 மணிக்கு பின்னர் புறப்படும் புறநகர் ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் இன்று கணிசமான அளவில் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல், சென்னை மெட்ரோ ரயிலும் வழக்கத்தை விட கூடுதல் சேவைகள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-
7 நிமிடத்திற்கு ஒரு ரயில்: புறநகர் ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு காரணமாக இன்று மெட்ரோ ரயில்களில் பயணிகள் அதிக அளவில் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஏழு நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே 7 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் இயக்கபட்டு வரும் நிலையில், இன்று காலை 10 மணி முதலே இயக்கப்படும். விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலான புளூ வழித்தடம் மற்றும் செண்ட்ரல் டூ செயிண்ட் தாமஸ் இடையேயான பச்சை வழித்த்தடத்திலும் மேற்கண்டவாறு இயக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
இனி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் நோ ரீஃபண்ட்.. ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications