பிச்சைக்காரருடன் ஓடிய மனைவி.. தங்க நகையுடன் மருமகனை மணமுடித்த அழகான மாமியார்.. 2025ன் சில விநோதங்கள்
சென்னை: உறவு சிக்கல்கள் தொடர்பான வழக்குகள் சமீபகாலமாகவே நீதிமன்றங்களில் பெருகி வருகின்றன.. திருமண முறிவு, ஜீவனாம்சம், குழந்தை பராமரிப்பு போன்ற விஷயங்களில் கோர்ட்டுகள் தலையிட்டு நல்ல தீர்ப்பு சொன்னாலும், குடும்ப வன்முறைகள் அதிகரித்து உள்ளன. இதற்கெல்லாம் பிரதானமாக கள்ளக்காதல்கள் பெருகி வருவதும், முக்கிய காரணமாக காட்டப்படுகின்றன. அந்தவகையில் இந்த வருடம் 2025-ல் பல விநோத சம்பவங்கள் நடந்துள்ளன.. அதில் உத்தரபிரதேசத்தில் நடந்த ஒருசிலவற்றை பற்றி மட்டும் பார்ப்போம்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்தது.. அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்து முடிவெடுத்து மாப்பிள்ளை தேடி வந்தனர்..

இறுதியில் ஒரு நல்ல இடத்தில் சம்பந்தம் அமைந்தது.. இரு வீட்டினரும் நேரில் சந்தித்து பேசினார்கள்.. மணமக்களுக்கும் ஒருவரையொருவர் பிடித்துவிட்டது.. ஏப்ரல் 16-ந்தேதி மணமக்களுக்கு திருமணம் செய்ய நிச்சயமும் செய்தனர்.
இதற்கான திருமண அழைப்பிதழ்களும் உறவினர்கள், நண்பர்களுக்கு விநியோகம் செய்தனர்.. திருமண விஷயமாக வருங்கால மாப்பிள்ளை அடிக்கடி, மணமகள் வீட்டுக்கு வந்து சென்றார்.. மணமகளின் அம்மாவிடம் அதாவது தன்னுடைய வருங்கால மாமியாரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்..
மருமகனை மணந்த மாமியார்
அடிக்கடி மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து சென்றதால், மாப்பிள்ளைக்கும், வருங்கால மாமியாருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டது.. மணமகளை விட, அவரது அம்மா அழகாக இருப்பாராம்.. இந்த அழகில் மாப்பிள்ளை மயங்கி, புது செல்போனை வாங்கி தந்து தினமும் பேசி வந்துள்ளார்.. வீட்டில் உள்ளவர்கள் இதுகுறித்து கேட்டதற்கு கல்யாண ஏற்பாடுகள் சம்பந்தமாக பேசுவதாக சமாளித்துள்ளார்.
ஒருகட்டத்தில் மாமியார் - மருமகன் இருவருமே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.. வீட்டை விட்டு போகும்போது, மகளுக்கு திருமணத்துக்காக வாங்கி வைத்த நகைகள், பணத்தையும் எடுத்துக்கொண்டு மருமகனுடன் ஓட்டம் பிடித்தார். மாமியார்.. இதனால் இரு குடும்பத்தினருமே அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு ஓடினார்கள்..
போலீசாரும் ஓடிப்போன இருவரையும் வளைத்து பிடித்தனர்.. ஆனால், குடிகார கணவருடன் தன்னால் வாழ முடியாது, மகளுக்காக நிச்சயித்திருந்த இளைஞருடனேயே வாழ விரும்புவதாக கறாராக சொல்லிவிட்டார்.. இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை தந்தது.
மருமகளை மணந்த மாமனார்
அதேபோல இதே உத்தரபிரதேசத்தில் கடந்த ஜூலை மாதம் ஒரு சம்பவம் நடந்தது.. ஷகீல் -ஷபனா என்ற தம்பதிக்கு 6 குழந்தைகள் இருக்கிறார்கள்.. 55 வயதான ஷகீல் ஒரு தொழிலதிபர் ஆவார்.. தன்னுடைய 15 வயது மகனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் தேடினார்.. ஆனால் 15 வயது என்பதால் யாருமே பெண் தரவில்லை.
இறுதியில் பக்கத்து கிராமத்தில் ஒரு பெண்ணை பார்த்து பேசி முடித்தார்.. மகனுக்கும், அப்பெண்ணுக்கும் நிச்சயதார்த்தமும் செய்தார்..
அடுத்த சில நாளில், அப்பாவின் செல்போனை, 15 வயது மகன் தற்செயலாக எடுத்து பார்த்தபோது, அதில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன், அப்பா ஆபாசமாக பேசியிருந்த வீடியோக்களை கண்டு அதிர்ந்தார்.. ஆடியோ மெசேஜ்களும் ஆபாசமாக இருந்ததை கண்டு நிலைகுலைந்து போனார்.. இதுகுறித்து தந்தையிடம் தகராறு செய்த மகன், அந்த பெண்ணை தன்னால் திருமணம் செய்ய முடியாது என்றார்.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத நிலையில், மகனுக்காக பார்த்த அந்த பெண்ணை, ஷகீல் திருமணம் செய்து கொண்டு வந்து நின்றார்.. இதை பார்த்து ஷகீலின் மனைவி ஷபனா அதிர்ச்சி அடைந்து, போலீசுக்கு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்போது தந்தது நினைவிருக்கலாம்.
ராஜேஸ்வரி மாயம்
அதேபோல ஹர்தோய் மாவட்டம் ஹர்பால்பூர் பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.. ராஜு - ராஜேஸ்வரி தம்பதிக்கு 6 குழந்தைகள் இருக்கிறார்கள்.. ராஜேஸ்வரிக்கு 36 வயதாகிறது..
திடீரென ஒருநாள் ராஜேஸ்வரி மாயமானார்.. இதுகுறித்து ராஜு போலீசில் புகார் தந்தார்.. அதில், "நான்ஹே பண்டிட் (வயது 45) என்ற பிச்சைக்காரர், சில சமயம் பக்கத்து வீடுகளில் பிச்சை எடுக்க வருவது வழக்கம். அப்போது என்னுடைய மனைவி ராஜேஸ்வரிக்கும், அந்த பிச்சைக்காரருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பிச்சைக்காரருடன் ஓட்டம்
2 பேரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவார்கள். சம்பவத்தன்று என்னுடைய மனைவி ராஜேஸ்வரி, மார்க்கெட்டுக்கு சென்று துணிகள், காய்கறிகள் வாங்கி வருவதாக சொல்லிவிட்டு போனார். அதற்கு பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை.
எருமை மாட்டை விற்று, அந்த காசை வீட்டில் வைத்திருந்தேன்.. அந்த பணத்துடன் என் மனைவி வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவரை அந்த பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட் அழைத்து சென்றிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதால், மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த சம்பவமும் அப்போது பெரும் பரபரப்பை தந்துவிட்டது.
தம்பதிகளின் பரஸ்பரம் அன்பு, புரிதல்
கணவன் மனைவி உறவு என்பது ஒருவருக்கொருவர் நேசம், நம்பிக்கை வைத்து வாழும் உறவு.,, கஷ்ட, நஷ்டம், சோதனைகளை பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கை கூட்டணியாகும்.. பரஸ்பரம் புரிந்து, அன்பும் ஆதரவும் வழங்கி எத்தனையோ தம்பதிகள் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும்போது, இப்படியும் சில தம்பதிகள் இந்த 2025-லும் நம்மிடையே வாழ்ந்து வருவது விநோதமாகவே உள்ளது..!!












Click it and Unblock the Notifications