Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வழக்குகளில் மோதிக்கொள்ளும்.. பீலா வெங்கடேசன் - முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்.. என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தையூரில் உள்ள பங்களா வீட்டில் பீலா வெங்கடேசன் அளித்த கடிதத்தின் அடிப்படையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் உச்ச நீதிமன்றம் சென்று இடைக்கால தடை வாங்கினார்.

Beela Venkatesan vs her ex Huspand Former Special DGP Rajes Das Clashes in court cases What s going on

இதற்கு இடையில் ராஜேஷ் தாஸிடம் இருந்து ஐஏஎஸ் அதிகாரி பீலா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். அதோடு தாஸ் என்று தனது பெயரில் உள்ள இரண்டாம் பெயரை நீக்கியும் அவர் செய்திகளில் விளம்பரம் கொடுத்தார். இது தொடர்பான விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், தையூரில் உள்ள பங்களா வீட்டில் , பீலா வெங்கடேசின் தூண்டுதலின் பேரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாக ராஜேஸ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், பீலா தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டியதாலும் தூண்டுதலின் பேரிலும் மின் வாரிய அதிகாரிகள் தனது பங்களாவில் உள்ள மின் இணைப்பை துண்டித்துள்ளதாகவும் அதேவேளையில், மின் வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி பாலாஜி, இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு எரிசக்தி துறை முதன்மை செயலாளராக இருக்கக்கூடிய பீலா வெங்கடேஷ் மற்றும் மின்பகிர்மான கழகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. வரும் 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை அன்றைய தினத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. பீலா வெங்கடேசன் தங்கி இருக்கக்கூடிய வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக ராஜேஷ் தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தையூரில் உள்ள பங்களாவில் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து மிரட்டிச் சென்றதாக பீலா வெங்கடேசன் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. விவாகரத்து வழக்கு விசாரணைக்கு இடையே பீலா வெங்கடேசன் வீட்டிற்கு சென்று ராஜேஷ் தாஸ் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.

வெங்கடேசன் - ராணி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் பீலா. ஐ.ஏ.எஸ் அதிகரியான பீலா வெங்கடேசன் தமிழக அரசில் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்து வருகிறார். இவரின் தந்தை எல்.என்.வெங்கடேசன், தமிழக காவல்துறை டிஜிபியாக பதவி வகித்து ஓய்வுபெற்றவர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாழையடி ஆகும்.

தாய் ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். ராஜேஷ் தாஸ் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஸ் தாசை கடந்த 1992-ம் ஆண்டு பீலா திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு அவரின் பெயர் பீலா ராஜேஷ் என்றானது. இதற்கிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய முடிவு செய்த பின்னர் தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றிக்கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+