Beela Venkatesan: நடிகை ஸ்ரீவித்யா மாதிரியே.. முடியெல்லாம் கொட்டி..கடைசி காலத்தில் யாரையும் பார்க்காத பீலா ஐஏஎஸ்!
சென்னை: சுகாதாரத்துறை முன்னாள் செயலாளரும் ஐஏஎஸ் அதிகாரியுமான பீலா வெங்கடேஷ் Beela Rajesh ( பீலா ராஜேஷ்) திடீரென உடல் நலக்குறைவால் காலமானார். புற்றுநோய் காரணமாக அவர் மரணம் அடைந்த நிலையில் மரணத் தருவாயில் நெருங்கிய உறவினர்களை தவிர வேறு யாரையும் சந்திக்கவில்லை என சொல்லப்படுகிறது. புற்றுநோயால் உடல் நலம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், உடல்நலன் விசாரிக்க முயன்ற அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சக ஐஏஎஸ் அதிகாரிகளையும் கூட பீலா ராஜேஷ் சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் (56) இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கொரோனா காலத்தில் ஓய்வின்றி பணியாற்றி மக்கள் மனதில் தனித்த இடம் பிடித்தவர்.
1969 ஆம் ஆண்டு பிறந்த பீலா வெங்கடேசன், சாத்தான்குளம் தொகுதியில் 2006ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவி ராணி வெங்கடேசன் மற்றும் முன்னாள் டிஜிபி எஸ்.என். வெங்கடேசன் ஆகியோரின் மகளாவார்.

தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தைச் சேர்ந்த இவர், பிறந்ததும், வளர்ந்ததும், படித்ததும் அனைத்தும் சென்னையில்தான். கல்வியில் ஆர்வம் கொண்ட அவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய குடிமைப்பணியில் சேரும் கனவை நோக்கி பயணித்த அவர், 1997ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பணியாற்றியதுடன், மத்திய ஜவுளித் துறை மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.
பின்னர் தமிழ்நாடு கேடரைப் பெற்று மாநிலத்துக்கு வந்து, செங்கல்பட்டு துணை ஆட்சியராகவும், மீன்வளத்துறை இயக்குநராகவும் பணியாற்றினார். 2019ஆம் ஆண்டு சுகாதாரத்துறை செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், கொரோனா பேரிடர் காலத்தில் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். மருத்துவ உபகரணங்கள் முதல் தடுப்பு நடவடிக்கைகள் வரை அனைத்து துறைகளிலும் தன்னாலான சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மக்களின் மனதில் சிறப்பிடத்தைப் பெற்றார்.
அண்மையில் கணவர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்து பெற்று பெயரை "பீலா வெங்கடேஷ்" என மாற்றியிருந்தார். தற்போது தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக அரசின் நிர்வாகத் துறைக்கு ஒரு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
அரிய வகை மூளை புற்றுநோயால் பீலா ராஜேஷ் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மறைவு குறித்த சோகம் நிரம்பிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது முகத்தோற்றம் முற்றிலும் மாறி இருந்தது.
மேலும் சில சிகிச்சைகளால் தலைமுடி அனைத்தும் உதிர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. சிகிச்சையில் இருந்த பீலா ராஜேஷை சந்திக்க அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சக ஐஏஎஸ் அதிகாரிகள் முயன்ற நிலையில் தனது தோற்றத்தை காட்டிக்கொள்ள விரும்பாத பீலா ராஜேஷ் யாரையும் சந்திக்கவில்லை என சொல்லப்படுகிறது.
நடிகை ஸ்ரீவித்யா புற்றுநோயால் இறந்த நிலையில் அவரும் இதே போல் தான் கடைசி காலத்தில் யாரையுமே சந்திக்காமல் மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications