கெஞ்சணுமா பதவிக்காக? ஓவர் பிரஷர்.. மீண்டும் மக்களிடமே போகலாம்? விஜய் "ரிஸ்க்" முடிவு? ஆடிப்போன களம்
சென்னை: விஜய், தமிழக அரசியலில் ஒரு புதிய விடியலை நோக்கிப் பயணிக்க முடிவு செய்துள்ளார்.. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய நெருக்கடிகளால் தற்போது பெரும் மனப்போராட்டத்தில் ஆழ்ந்து விட்டதாக தெரிகிறது.. மக்களின் ஆதரவைப் பெற்றபோதும், ஆட்சி அமைக்கத் தேவையான அந்த இலக்கை அடைய நேரிடும் முட்டுக்கட்டைகள் அவரை ஒரு தீர்க்கமான முடிவை நோக்கித் தள்ளி வருகின்றனவாம். தொடர் அரசியல் சூழலால், விஜய் அதிருப்திக்கு ஆளானதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வட்டமடித்து கொண்டிருக்கிறது
தேர்தல் ரிசல்ட் வெளியானதுமே, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத வகையில் ஒரு இழுபறி நிலை நீடித்து வருகிறது.

தவெக விஜய்
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மைக்குச் சற்றே குறைவான இடங்களைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு தற்போது 116 இடங்கள் தவெக வசம் உள்ள நிலையில், 118-ஐத் தொட ஜஸ்ட் 2 இடங்களே தேவைப்படுகின்றன.
இந்த சூழலில், இரண்டு இடங்களை வைத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விசிக தனது முடிவை இன்று அறிவிக்க உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்திக்க விஜய் தரப்பு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்
அதுமட்டுமல்லாமல் தமிழக அரசியல் தலைவர்கள், புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆளுநருக்கு விடுத்து வருகிறார்கள்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக ஆட்சி அமைக்கும் கட்சிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதிலும், அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், எடப்பாடியின் இந்த வாழ்த்துச் செய்தி அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
இதுபோக, டாக்டர் ராமதாஸ், விசிக திருமாவளவனை "தம்பி" என்று அழைத்து, தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பதும் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.
பெரும் தலைவலி
இந்த அரசியல் ஆட்டத்தில் சிறு கட்சிகள் விதிக்கும் கடுமையான நிபந்தனைகள் விஜய்க்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகத் தனது நெருங்கிய வட்டாரத்தில் அதிருப்தியும் வெளிப்படுத்தினாராம் விஜய்.
மக்களின் தீர்ப்பைத் தெளிவாகப் பெற்ற பிறகும், ஆட்சி அமைக்கத் தடையாக அனைவரும் அணி திரள்வது விஜய்க்கு பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. ஆட்சி அமைக்கும் முன்பே இத்தனை நெருக்கடிகளும் நிபந்தனைகளும் இருந்தால், முதல்வரான பிறகு சுதந்திரமாகச் செயல்பட முடியாது என்று விஜய் அஞ்சுவதாக தெரிகிறது.
கெஞ்சணுமா பதவிக்காக
"10 சீட்டுக்கு 5 கட்சிகளிடம் கெஞ்சி கட்டாயம் ஆட்சி அமைக்க வேண்டுமா? செலவை பற்றி கவலை வேண்டாம்.. நான் பார்த்து கொள்கிறேன்.. ஆட்சியே வேண்டாம், மீண்டும் மக்களிடமே சென்று முழு ஆதரவு கேட்போம்" என்ற மனநிலைக்கும் விஜய் சென்றுவிட்டாராம்.
எனினும் தொடர் அழுத்தங்களால் விஜய் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதால், அவரது ஆலோசகர்கள் விஜய்யை சமாதானப்படுத்தி வருகிறார்கள்.. உச்ச நீதிமன்றத்தை அணுகுவது, மாற்று அரசியல் வியூகங்களை வகுப்பது அல்லது ஒரு வலுவான எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவது என்பது உட்பட பல ஆலோசனைகளை விஜய்க்கு வழங்கினார்களாம்..
இதுகுறித்த தவெக தரப்பில் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகாவிட்டாலும், தொண்டர்கள் ஒருவித டென்ஷனிலேயே இருக்கிறார்களாம். விஜய்யின் மவுனம் கலையாதது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இத்தனை பரபரப்புகளுக்கு நடுவே, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? அல்லது மீண்டும் ஒரு தேர்தல் களமா? என்பது இன்று தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications