தபால் துறையின் சூப்பரான சேமிப்பு திட்டம்! அஞ்சல் துறை வாடிக்கையாளர்களுக்கு 22ம் தேதி அருமையான சான்ஸ்
சென்னை: சேமிப்பு திட்டங்கள் என்பது ஒருவரின் நிதிப் பாதுகாப்பை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதற்கும், தங்களின் எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பதற்குமான திட்டங்களாகும். இதுபோன்ற பலனுள்ள திட்ட சேவைகள், வங்கிகள் மூலமாகவும், அஞ்சலகங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும், அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் பொதுமக்களின் அபார வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு அருமையான சான்ஸ் வந்துள்ளது.. அதென்ன?
தபால் நிலையங்களில், PLI என்று சொல்லப்படும் அஞ்சல் ஆயுள் காப்பீடு, RPLI என்று சொல்லப்படும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை செய்து வருகிறது. இந்த காப்பீடுகளை எடுத்துள்ளபோது, சிலசமயம், முறையாக பிரீமியம் கட்டமுடியாத சூழல் பலருக்கும் ஏற்படும்.. இதன்காரணமாக காப்பீடுகள் காலாவதியாகி, அதன் பலனையும் பெற முடியாத நிலைமை வந்துவிடுகிறது..

தபால் துறை காப்பீடு திட்டம்
இதுபோன்ற காப்பீடு காலாவதியான காப்பீட்டுதாரர்களின் வசதிக்காகவே, தபால்துறை சார்பில் காலாவதியான காப்பீடுகளை புதுப்பிக்க, சிறப்பு முகாம்கள் அனைத்து அஞ்சலகங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படி நடத்தப்படும் முகாம்களில், காப்பீட்டு பிரீமியத்திற்கான காலாவதி கட்டணத்தில் சலுகைகளும் கஸ்டமர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அதாவது, அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீட்டுகளை புதுப்பிப்பதற்கான பிரீமியத்தொகை ரூ.1 லட்சம் வரை தாமத கட்டணத்தில் 25 சதவீதமும், அதிகபட்ச தள்ளுபடி தொகை ரூ.2,500 வரை வழங்கப்படுகின்றன. ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை தாமத கட்டணத்தில் 25 சதவீதமும், அதிகபட்ச தள்ளுபடி தொகை ரூ.3 ஆயிரமும் வழங்கப்படுகின்றன. ரூ.3 லட்சம் மற்றும் அதற்கு மேல் தாமத கட்டணத்தில் 35 சதவீதமும், அதிகபட்ச தள்ளுபடி தொகை ரூ.3,500-ம் வழங்கப்பட்டு வருகின்றன.
அஞ்சல் துறை முகாம்
தபால் துறையில் குறைகளை நிவர்த்தி செய்ய முகாம்கள் நடத்தப்பட்டு வருவதும், அதில் மேற்கண்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருவதும் தபால்துறை வாடிக்கையாளர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.
அதேபோல, ஓய்வூதியதார்களுக்காகவே தபால்துறை எண்ணற்ற சலுகைகளையும், அறிவிப்புகளையும் வழங்கி வருவதுடன், அஞ்சல்துறை பென்ஷன்தாரர்களின் குறைகளை தீர்ப்பதற்காகவே முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.. கடந்தமாதம்கூட, சென்னையில் அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
குறைதீர்ப்பு முகாம்
இந்நிலையில், தமிழக அஞ்சல் துறை சார்பில் மீண்டும் ஒருகுறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. இந்த குறைதீர்க்கும் முகாமுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை வரும் 22ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அஞ்சல் அலுவலகம் செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
அதில், "டாக் சேவா ஜன் சேவா' நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக வட்டம் அஞ்சல் துறை சார்பில், வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 11832 அஞ்சல் நிலையங்களின் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் பங்கேற்கலாம்.
டாக் சேவா ஜன் சேவா - அஞ்சல் சேவை
அஞ்சல் சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் சேவைகளை சிறப்பாக மேம்படுத்துவது குறித்து வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை டாக் அதாலத் என்ற தலைப்பில் ஏ.சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் அலுவலகம், தமிழக வட்டம், சென்னை 600002 என்ற முகவரிக்கு செப்டம்பர் 22ம் தேதிக்குள் அனுப்பலாம்.
மேலும் டாக் அதாலத் என்ற தலைப்புடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்" என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications