அடல் பென்ஷன் யோஜனா திட்டம்.. ரூ.42 தினமும் கட்டினால், மாதம் 1000 ரூபாய் தேடி வருமே! அருமையான திட்டம்
சென்னை: அமைப்புசாரா துறையுடன் தொடர்புடையவர் மற்றும் வேறு எந்த ஓய்வூதிய திட்டத்திலும் முதலீடு செய்யாதவர்களுக்க, பெஸ்ட் சாய்ஸாக உள்ளதுதான், அடல் பென்ஷன் யோஜனா திட்டமாகும். இந்த திட்டத்தில் எப்படி இணைவது? இதிலுள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
அடல் பென்ஷன் யோஜனா என்பது, மத்திய அரசின் இதர எந்த நலத் திட்டத்திலும் இணையாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் நிலையான ஒரு தொகையை பென்ஷனாக வழங்கும் திட்டமாகும். இந்த பென்ஷன் தொகைக்கு மத்திய அரசின் உத்தரவாதம் இருக்கிறது. இதில் இணைய குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 40.

மத்திய அரசு: மத்திய அரசால் கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்களுக்கான, உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதிய திட்டமான, இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டம், கடந்த 2015-16ம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரையிலான நபர்கள் முதலீடு செய்யலாம். நீங்கள் 18 வயதாகும்போது குறைந்தபட்சம் மாதம் ரூ.210 முதலீடு செய்யலாம்..
சேமிப்பு எவ்வளவு: உதாரணத்துக்கு தினமும் 7 ரூபாய் சேமித்து வந்தாலே, அதாவது மாதம் ரூ210 சேமித்து வந்தாலே, 60 வயதாகும்போது ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் வரை ஓய்வூதியமாக நீங்கள் பெற முடியும்.. எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும் என்பதை பொறுத்து பென்சன் தொகை அதிகமாக இருக்கும்.
அதேபோல, மாதம் 5000 ரூபாயை ஓய்வூதியமாக பெற வேண்டுமானால், 18 வயதிலிருந்து ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ.210 செலுத்த வேண்டும். இதே தொகையை 3 மாதத்துக்கொருமுறை செலுத்தினால், 626 ரூபாயும், 6 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தினால், 1,239 ரூபாயும் செலுத்த வேண்டும். மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் பெற விரும்பினால், 18 வயதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.42 செலுத்த வேண்டும்.
மாதம் 1,000: தினசரி ரூ.42 சேமித்து முதலீடு செய்து, 20 வருடங்கள் முதிர்வு காலத்திற்கு பிறகு உங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிலையான வருமானம் கிடைக்கிறதென்றால், முதிர்வு காலத்திற்கு பிறகு, மாதந்தோறும் ரூ.10,000 கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தில், தம்பதிகளாக சேர்ந்து முதலீடு செய்யும் பட்சத்தில், அதிக லாபத்தை நீங்கள் பெறலாம்.
இந்த APY பென்ஷன் திட்டத்தில் ரூபாய் 2,000 ஓய்வூதியத்திற்கான பிரீமியம் ரூபாய் 84 ஆகும். ரூபாய் 3,000 மாதந்திர பெண்ஷன் பெற ப்ரீமியம் தொகை ரூபாய் 126. ரூபாய்4,000 மாத ஓய்வூதியத்திற்கு ப்ரீமியம் ரூபாய் 168 ஆகவும் உள்ளது... 40 வயதில் APY திட்டத்தில் சேர்ந்தால், ரூபாய் 1,000 மாத ஓய்வூதியத்திற்கான பிரீமியம் ரூபாய் 291 ஆக இருக்கும். ஆக, 2,000, 3,000, 4,000, 5,000 பென்ஷன் பெற அதற்கு ஏற்ற வகையில் ப்ரீமியம் அளவும் அதிகரிக்கும்
விதிவிலக்குகள்: சந்தாதாரர் திடீரென இறக்க நேர்ந்துவிட்டால் அவரின் வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் வழங்கப்படும்... ஒருவேளை 2 பேருமே இறந்துவிட்டால், அந்த பென்ஷன் தொகை சந்தாதாரரின் நாமினிக்கு வழங்கப்படும்.. 60 வயதிற்கு முன்பாகவே சந்தாதாரரால் இந்த திட்டத்திலிருந்து வெளியேற முடியாது. எனினும் ஒருசில விதிவிலக்குகள் உண்டு..

அதேபோல, அதிக தொகையை கட்டி பென்ஷனை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது. வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்தும் வசதியும் உள்ளது. வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகன் அனைவருமே இந்த சமூக பாதுகாப்பு நல திட்டத்தில் சேர்ந்து பயன் பெற இயலும்.
சந்தா வசதிகள்: இந்த அடல் பென்ஷன் திட்டத்தை ஒருவர் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் தொடங்க முடியும். வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அவசியம் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலமும் இந்தக் கணக்கைத் தொடங்க முடியும். வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்தும் வசதியும் இருக்கிறது. இதற்கு வங்கிக்கணக்கு, ஆதார் கார்டு போன்றவை ஆவணமாக வழங்க வேண்டும்.
மொத்தத்தில், குறைந்தபட்ச பென்ஷன் தொகையை இந்த திட்டம் உறுதி செய்கிறது. ஒவ்வொரு இதுவரை 7 கோடிக்கும் அதிகமானோர் இந்த திட்டத்தின்மூலம் பயனடைந்துள்ளனர்.. அதனால்தான், இந்த 2024-25ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 58 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய கணக்குகளை தொடங்கியிருக்கின்றன.
60 வயதுக்கு முன்பாகவே இந்தத் திட்டத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகிறது. அப்போது சந்தாதாரர் கட்டிய தொகை மற்றும் அதற்குரிய வருமானம் மட்டுமே வழங்கப்படுகிறது. அவருக்காக அரசு போட்ட பணமும் அதற்கான வருமானமும் தரமாட்டார்கள். அதேபோல, தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS - National Pension Scheme) ஒட்டுமொத்த நிர்வாக மற்றும் நிறுவன கட்டமைப்பின் கீழ் APY ஓய்வூதிய (Pension) நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA - Pension Fund Regulatory and Development Authority) நிர்வகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications