கிராம நத்தம் பட்டா மாற்றம்.. புறம்போக்கு நிலத்தில் இது மேஜர்! வீட்டுமனைக்கு 2 பேர் விண்ணப்பித்தால்?
சென்னை: நீங்கள் குடியிருக்கும் பகுதி, ஆட்சேபனைக்குரிய பகுதியாக ஏரி, குளம் போன்றவற்றிக்கு அருகிலோ அல்லது மக்கள் பயன்பாட்டிற்குரிய நிலத்தில் ஆக்கிரமித்து வசித்து வந்தால், அதற்கு பட்டா பெற முடியுமா? ஒரே புல எண்ணிற்கு அல்லது சொத்திற்கு 2 பேர் நத்தம் வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பிக்க நேர்ந்தால், அதை எப்படி பெறுவது? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
குடியிருக்கு பகுதி, ஆட்சேபனைக்குரிய பகுதியாக இருக்கக்கூடாது.. அப்படியிருந்தால், அதனையே புறம்போக்கு நிலம் என்கிறோம்.. இவை யாவுமே அரசுக்கு சொந்தமான நிலங்களாகும்... அனைத்து பொதுமக்களுமே ஒரு இடத்தை உபயோகிப்பதாலேயே, அதற்கு புறம்போக்கு நிலம் என்கிறார்கள்.

பொதுப்பயன்பாடு
அந்தவகையில், அனைவரும் உபயோகிக்கக் கூடியதாக பொதுப்பயன்பாட்டுக்கு உரியதாக, தரிசு நிலம், ஆறு, ஓடை, வாய்க்கால், சாலை, சுடுகாடு போன்றவை உள்ளன.. இதுபோன்ற இடங்களில் வசிக்கவும் முடியாது, விவசாயமும் செய்யமுடியாது, தொழிலும் செய்ய முடியாது.
எனினும், நத்தம் என்ற வகையறாவில் மட்டுமே, பொதுமக்கள் வீட்டை கட்டிக்கொள்ள அரசு அனுமதி தந்துள்ளது.. அடித்தட்டு மக்கள், இங்கு குடியிருந்து கொள்ளலாம், விவசாயம் பார்த்து கொள்ளலாம். மற்றபடி எந்தவிதமான கமர்ஷியல் காரணத்துக்காகவும் உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது.
புறம்போக்கு நிலம்
அந்தவகையில், புறம்போக்கு நிலத்தை 5 வருடத்துக்கு மேல் வைத்திருந்தால், அந்த நிலத்துக்கும் உரிமை உள்ளது. தங்களுக்கு தேவையில்லாத நிலம் என்று அரசே ஒதுக்கி, அந்த புறம்போக்கு நிலத்தில் தங்கியிருந்தால், அங்குள்ளவர்கள் எளிதாக பட்டா பெற்று கொள்ளலாம்...
ஆனால், நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா வேண்டி விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட இடம், ஆட்சேபனையற்ற நிலமாக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வருவாய் ஆய்வாளர், விஏஓ உள்ளிட்டோர் நேரடி ஆய்வு மேற்கொள்வார்கள். அந்த இடம் பொது இடமா? நீர்நிலைகளுக்கு அருகில் உள்ளதா? ஆட்சேபனையற்ற இடமா? மேச்சல் புறம்போக்கு நிலமா? உள்ளிட்ட அனைத்தையுமே ஆய்வு செய்து, அறிக்கை தருவார்கள். இதன்படியே வட்டாட்சியர் நத்தம் வீட்டுமனை பட்டா வழங்குவார்கள்.
புல எண்கள்
அதேபோல, சம்பந்தப்பட்டவர்களின் முன்னோர்களின் பெயர், சம்பந்தப்பட்ட புல எண்ணில் ஏற்கனவே பதிவாகியிருந்தால், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும். ஒருவேளை, அந்த இடத்திற்கான புல எண் தெரியாவிட்டால், உங்களது விஏஓ ஆபீசிலேயே, அந்த இடத்துக்கான புல எண்ணை அறிந்து கொள்ளலாம்.
புல மண் மட்டுமல்ல, அந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது? புல எண் யார் பெயரில் இருக்கிறது? அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு பகுதியில் நிலம் உள்ளதா? ஆட்சேபனைக்குரிய இடத்தில் அமைந்துள்ளதா? தனிநபர் பெயரில் நிலம் உள்ளதா? என அனைத்தையுமே தெரிந்து கொண்டு, அதற்கு பிறகு நத்தம் வீட்டுமனை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ஏரி, குளம், நிலம்
ஆட்சேபனைக்குரிய பகுதியாக ஏரி, குளம் போன்றவற்றிக்கு அருகிலோ அல்லது மக்கள் பயன்பாட்டிற்குரிய நிலத்தில் ஆக்கிரமித்தோ நீங்கள் வசித்து வந்தால், கண்டிப்பாக, பட்டா வழங்கப்பட மாட்டாது.. அதுமட்டுமல்ல, வேறொரு தனிநபர் பெயரில் அந்த இடம் அமைந்து, அந்த இடத்திற்கு 2 பேர் நத்தம் இலவச வீட்டுமனை வேண்டி விண்ணப்பித்தாலும், பட்டா வழங்கப்படாது.. ஒரே புல எண்ணிற்கு அல்லது ஒரே சொத்திற்கு 2 பேருமே பட்டா கேட்டால், கோர்ட்டுக்கு சென்றுதான் தீர்வு காண முடியும்.
நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, அரசு கையில் எடுத்து வருகிறது.. அதிலும், நத்தம் பட்டா மாறுதல் செய்ய வசதியையும், அரசு கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.. பட்டா மாறுதல் செய்வது மட்டுமின்றி, உட்பிரிவு செய்வது உட்பட எல்லாவற்றையுமே குறைவான கட்டணம் செலுத்தி ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். இதற்கு eservices.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டில் விண்ணப்பித்து, பட்டா பெற்றுக் கொள்ளலாம்.
எப்படி விண்ணப்பிப்பது
- https://eservices.tn.gov.in/ என்ற வெப்சைட்டில் உங்களது மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர், கிராமத்தின் பெயர், பட்டா எண் அல்லது புல எண் அல்லது நிலத்தின் பெயர், நிலத்தின் வகை, நிலத்தின் புல எண், உட்பிரிவு எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
- ஊரகமா? நத்தமா? என்ற என்பதை குறிப்பிட வேண்டும். ஊரகம் என்றால் வயல் சார்ந்த இடங்கள், நத்தம் என்றால் வீடு சார்ந்த நிலம் சார்ந்த இடமாகும். இறுதியில் கேப்சா எண்ணை பதிவிட்டு, "சமர்ப்பி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களது நத்தம் நிலத்தின் பட்டாவை ஆன்லைனிலேயே காண முடியும். இதனை டவுன்லோடும் செய்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications