Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நத்தம் புறம்போக்கு பட்டா பெறுவது எப்படி? கிராம நத்தம் நிலத்தில் இவ்வளவு இருக்கா? ஆன்லைன் வசதி சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி? கிராம நத்தம் பட்டாக்கள் என்பவை யாவை? யார் வேண்டுமானாலும் புறம்போக்கு பட்டாவை பெற முடியுமா? அதற்குரிய விதிமுறைகள் என்னென்ன? இந்த நத்தம் பட்டாக்களை ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது?

நத்தம் என்றால் குடியிருப்பு பகுதி என்று அர்த்தம்.. கிராம நத்தம் என்றால், கிராமத்தில் இருக்கும் குடியிருப்பிற்கு என ஒதுக்கப்பட்ட நிலம் என்று பொருள்.. நத்தம் புறம்போக்கு நிலம் என்றால், நத்தம் குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலம் எனப்படும். கிராம நத்தம் நிலத்தை குடியிருப்புகளாக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர, வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது..

grama natham patta land nattam purampokku land tn government

நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, அரசே நேரடியாக செயல்படுத்தி வருகிறது. அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு பகுதிகளில் வசித்து வந்தால், அந்த இடத்திற்கும் தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் புதிதாக ஒரு அரசாணை பிறப்பித்து, அந்த அரசாணையின்படி கிராமங்களில் 3 சென்ட் அளவிற்கு நத்தம் இலவச வீட்டுமனை பட்டாவும், நகர்ப்புறங்களில் ஒரு சென்ட் அளவிற்கு நத்தம் இலவச பட்டாவும் வழங்கும்படியான அரசாணை பிறப்பித்து வருகிறது.

நத்தம் பட்டா: அதன்படி, கிராமங்களிலோ அல்லது புறநகர் பகுதிகளிலோ அல்லது நகரங்களிலோ நீண்ட காலமாக நத்தம் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்து, அந்த இடத்திற்கு பட்டா வாங்காமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், நத்தம் பட்டா வேண்டி தாராளமாக விண்ணப்பிக்க வேண்டும்.

நீங்கள் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து, வீடுகட்டி உங்களுடைய அனுபவத்தில் வைத்திருந்தாலும், அந்த வீட்டிற்கான ரசீது, எத்தனை வருடம் அந்த வீட்டில் அல்லது அந்த இடத்தல் அனுபவம் செய்து வந்தீர்கள் மற்றும் அதற்கான மின் இணைப்பு மற்றும் இதர ஆவணங்களை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து இலவச வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்.

ஆட்பேசனை: ஆனால், இப்படி நீங்கள் நத்தம் அல்லது நத்தம் புறம்போக்கு இடத்திற்கு வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கும்போது, அந்த இடமானது ஆட்சேபனையற்ற நிலமாக இருக்க வேண்டும்.

காரணம், அந்த இடத்தை வருவாய் ஆய்வாளர், விஏஓ ஆய்வுசெய்வார்கள்.. அப்போது, சம்பந்தப்பட்ட அந்த இடம், பொது இடம் கிடையாது, நீர்நிலைக்கு அருகில் இல்லை, ஆட்சேபனையற்ற இடம், மேச்சல் புறம்போக்கு கிடையாது என அனைத்தையும் ஆய்வு செய்து, இறுதியாக ஒரு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கையின்படியே, வட்டாட்சியர் நத்தம் வீட்டுமனை பட்டா வழங்குவார்கள்.

வாரிசு சான்றிதழ்: அப்படி விண்ணப்பிக்கும்போது, உங்களுடைய முன்னோர்கள் பெயர் அந்த சம்பந்தப்பட்ட புல எண்ணில் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், உங்களுடைய வாரிசு சான்றிதழ், மற்ற ஆவணங்களை சமர்ப்பித்து, உங்கள் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் பெறமுடியும்.

ஒருவேளை உங்களுக்கு அந்த இடத்திற்கான புல எண்கள் தெரியாவிட்டால், சம்பந்தப்பட்ட விஏஓ அலுவலகத்திற்கு சென்று, உங்கள் இடத்திற்கான புல எண்ணை தெரிந்து கொள்ள வேண்டும்.

யார் பெயரில் உள்ளது: அதாவது, அந்த புல எண் யாருடைய பெயரில் உள்ளது? உங்கள் முன்னோர்கள் பெயரில் உள்ளதா? அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு பகுதியாக உள்ளதா? பொதுமக்கள் பயன்படுத்தப்படும் ஆட்சேபனைக்குரிய இடத்தில் உள்ளதா? வேறொரு தனிநபர் பெயரில் உள்ளதா? போன்றவற்றை தெரிந்து கொண்டு, நத்தம் வீட்டுமனை வேண்டி விண்ணப்பிக்கலாம்.

ஒருவேளை நீங்கள் குடியிருக்கு பகுதி, ஆட்சேபனைக்குரிய பகுதியாக ஏரி, குளம் போன்றவற்றிக்கு அருகிலோ அல்லது மக்கள் பயன்பாட்டிற்குரிய நிலத்தில் ஆக்கிரமித்து வசித்து வந்தாலோ, அந்த இடத்திற்கு நத்தம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட மாட்டாது.. அதேபோல, அந்த நத்தம் இடமானது வேறொரு தனிநபர் பெயரில் இருந்தாலோ அல்லது அந்த இடத்திற்கு 2 நபர்கள் நத்தம் இலவச வீட்டுமனை வேண்டி விண்ணப்பம் செய்திருந்தாலோ, அந்த இடத்திற்கு நத்தம் வீட்டுமனை பட்டா வழங்கப்படாது..

நத்தம் பட்டா: ஒரே புல எண்ணிற்கு அல்லது சொத்திற்கு 2 பேருமோ நத்தம் வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பிக்க நேர்ந்தால், அதை நீதிமன்றம் மூலமாக மட்டுமே முடிவு செய்து அந்த இடம் யாருடைய பெயரில் அனுபவத்தில் இருக்கிறது? யாருக்கு எந்த இடம் சொந்தமானது? என்பதை உறுதி செய்து அன்பிறகே நத்தம் வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.

அதேபோல ஆன்லைனிலும் eservices.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அடையாளச் சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். கிராம நத்தம் நிலத்தை குடியிருப்புகளாக மட்டுமே பயன்படுத்த முடியும். வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். நத்தம் பட்டாவை எப்படி டவுன்லோடு செய்து கொள்வது தெரியுமா?

- https://eservices.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று பட்டா / சிட்டா உள்ளிட்ட விவரங்களை பார்வையிட்டு, தேர்வு செய்ய வேண்டும்

- இப்போது உங்களுடைய மாவட்டத்தின் பெயர், நீங்கள் இருக்கும் வட்டத்தின் பெயர், கிராமத்தின் பெயர், பட்டா எண் அல்லது புல எண் அல்லது நிலத்தின் பெயர், நிலத்தின் வகை, நிலத்தின் புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை சரியாக பதிவிட வேண்டும்.

- அதேபோல, ஊரகமா? நத்தமா? என்ற ஆப்ஷன்களையும் நிரப்ப வேண்டும். அதாவது ஊரகம் என்றால் உங்களுடைய வயல் சார்ந்த இடங்களாகும். நத்தம் என்றால் உங்கள் வீடு சார்ந்த நிலங்களை குறிப்பதாகும்.

- இறுதியில், கேப்சா எண்ணை பதிவிட்டு, "சமர்ப்பி" என்பதை கிளிக் செய்தால், உங்களது நத்தம் நிலத்தின் பட்டாவை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே காணலாம், இதனை டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல, https://eservices.tn.gov. in/ என்ற இணையதளத்தின் மூலம், பட்டா மாறுதல், பட்டா-சிட்டா விவரங்கள், அ பதிவேடு விவரங்கள், அரசு புறம்போக்கு நிலம், புலப்பட விவரங்கள், நகர நில அளவை வரைபடம் ஆகியவற்றை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் நிலத்தின் உரிமையாளர் யார்? நிலத்தின் அளவு எவ்வளவு என்பது பொதுமக்களுக்கு துல்லியமாக தெரியும். அதன் மூலம் நில மோசடிகளில் சிக்கிவிடாமலும் தப்பித்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+