தபால் துறையின் அருமையான சேமிப்பு திட்டம்.. அஞ்சல் துறை பென்ஷன்தாரர்களுக்கு சூப்பர் சான்ஸ்! ஹேப்பி
சென்னை: சேமிப்பு திட்டங்கள் என்பது ஒருவரின் நிதிப்பாதுகாப்பை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதற்கும், தங்களின் எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பதற்குமான திட்டங்களாகும். இதுபோன்ற திட்டங்கள் வங்கிகள், அஞ்சலகங்கள், மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன.. இதில், அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் பொதுமக்களின் வரவேற்பை அபரிமிதமாக பெற்றுள்ளன.. அந்தவகையில், சென்னையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு அமைந்துள்ளது.. அது என்ன தெரியுமா?
அஞ்சல் நிலையங்களில் அஞ்சல் ஆயுள் காப்பீடு (பி.எல்.ஐ.), ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு (ஆர்.பி.எல்.ஐ.) விற்பனை செய்து வருகிறது. இந்த காப்பீடுகளை எடுத்துள்ளவர்களில் சிலர் முறையாக பிரீமியம் கட்ட தவற நேரிடுகிறது.. எனவே, காப்பீடுகள் காலாவதியாகி, அதன் பலனையும் பெற முடியாத நிலைமை வந்துவிடுகிறது..

அஞ்சல்துறை திட்டங்கள்
இப்படி காப்பீடு காலாவதியான காப்பீட்டுதாரர்களின் வசதிக்காக, அஞ்சல்துறை சார்பில் காலாவதியான காப்பீடுகளை புதுப்பிக்க, சிறப்பு முகாம்கள் அனைத்து அஞ்சலகங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது..
இதுபோன்ற முகாம்களில், காப்பீட்டு பிரீமியத்திற்கான காலாவதிக் கட்டணத்தில் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.. அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீட்டுகளை புதுப்பிப்பதற்கான பிரீமியத் தொகை ரூ.1 லட்சம் வரை தாமத கட்டணத்தில் 25 சதவீதமும், அதிகபட்ச தள்ளுபடி தொகை ரூ.2,500 வரை வழங்கப்படும்..
முகாம் வாய்ப்புகள்
ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை தாமத கட்டணத்தில் 25 சதவீதமும், அதிகபட்ச தள்ளுபடி தொகை ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும். அதேபோல, ரூ.3 லட்சம் மற்றும் அதற்கு மேல் தாமத கட்டணத்தில் 35 சதவீதமும், அதிகபட்ச தள்ளுபடி தொகை ரூ.3,500-ம் வழங்கப்பட்டு வருவதும் மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
அதேபோல , மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியம் பெற தங்கள் வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது.. ஆனால், நேரில் சமர்ப்பிக்க நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது..
ஓய்வூதியதாரர்கள்
எனவேதான், 'ஜீவன் பிரமான்' திட்டத்தை தபால்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.. இதன்மூலம், செயல்படும் இந்தியா தபால் வங்கி சார்பில் தபால்காரர்கள் ஓய்வூதியதாரர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவர்களது கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து தருகிறார்கள்.. இதற்கு சேவை கட்டணமாக வெறும் ரூ.70 தபால்காரரிடம் தந்தால் போதும்..
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், அடுத்த சில நிமிடத்திலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்துவிடலாம்.
பென்ஷன்தாரர்களுக்கு குட்நியூஸ்
இப்படி ஓய்வூதியதார்களுக்காகவே தபால்துறை எண்ணற்ற சலுகைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில், அஞ்சல்துறை ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க சென்னையில் முகாம் நடக்கிறது.. இதுபற்றின அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதில், "அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் 28.07.2025 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் 28.07.2025 அன்று காலை 11.00 மணியளவில் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சலகங்களுடன் தொடர்புடைய ஓய்வூதியதாரர்கள் ஏதாவது புகார்கள் இருப்பின் அவற்றை தபால் மூலமாகவும், மின்னஞ்சல் ([email protected]) மற்றும் வாட்ஸ்-அப் (8939646404) மூலமாகவும் 23.07.2025-க்குள் அனுப்பலாம்.
பெண்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு
அஞ்சலக ஆயுள் காப்பீடு/ ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு ஆகியவற்றின் விற்பனைக்கு நேரடி முகவர்களை ஈடுபடுத்துதல் மற்றும் பட்டியலிடுவதற்கான நேர்முகத் தேர்வு ராணிப்பேட்டை தலைமை அஞ்சலகத்தில் 26.07.2025 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும். விருப்பமுள்ள, சந்தை அனுபவமுள்ள, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் பெண் தேர்வர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
தகுதிகள்: 10-ம் வகுப்பு தேர்ச்சி, வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும்.இந்த முகவர்களுக்கு அஞ்சல் துறையிலிருந்து ஊதியம் வழங்கப்படமாட்டாது. அவர்களின் செயல்திறனுக்கு ஏற்ப ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும். ஆர்வமுள்ள பெண் தேர்வர்கள் தங்களின் சுய விவர குறிப்பு மற்றும் வயது, கல்வி, அனுபவம் ஆகியவற்றின் மூல சான்றுகளுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications