நிலம் ஒரு ஏக்கர் இருக்கா? ரூ.5000 மானியம் பெறும் சூப்பர் திட்டம்! மீன் பண்ணை வைத்திருப்போருக்கு ஹேப்பி
சென்னை: 'மீன் பண்ணை வைத்திருப்போருக்கு, மானிய விலையில் மீன் குஞ்சுகள் மீன் வளத்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த வருடமும், 1 கோடி மீன் குஞ்சுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அருகிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மீன் பண்ணை அமைத்தல் மற்றும் மீன் வளர்ப்புத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது மீன்வளத்துறை மூலம் இந்த மானியம் வழங்கப்படுகிறது.

மீன் மற்றும் இறால்
மீன் மற்றும் இறால் உணவுப் பொருட்களான தேவை அதிகமாகவே உள்ளது.. குறிப்பாக, வார இறுதிகளில் மீன் சந்தைகளில் பெருமளவு மக்கள் கூடும் நிலை உள்ளதால், இதனை பயன்படுத்தி, தொழில்முனைவோராக உயர விரும்புவோர், மீன் மற்றும் இறால் பண்ணைகளை அமைத்து நல்ல வருமானம் பெறலாம்... இதைத்தான் அரசும் ஊக்குவிக்கிறது.. இதற்காகவே, தமிழ்நாடு மீன்வளத்துறை இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இறால் வளர்ப்பு முறையை எடுத்துக் கொண்டால், பயோபிளாக் (உயிர்க்கூழ்மம்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் குறைவான தண்ணீரை பயன்படுத்தி அதிக அளவில் இறாலை வளர்க்க உதவுகிறது. ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுப் பிரிவினருக்கு ரூ. 7.20 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண்கள் போன்ற பிரிவினருக்கு ரூ. 10.80 லட்சம் மானியம் இறால் பண்ணை அமைக்க வழங்கப்படுகிறது.. இதுபோலவே மீன் பண்ணைகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது..
உள்நாட்டு மீன்கள்
இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, "தமிழகம் முழுவதும், உள்நாட்டு மீன்களை வளர்க்க விரும்புவோர், தங்கள் நிலங்களில் மீன் பண்ணை அமைத்தால், மீன்வளத் துறை சார்பில், மீன் குஞ்சுகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக புதிய தொழில் முனைவோரை உருவாக்க அரசு திட்டமிடுகிறது..
அந்தவகையில், இந்த வருடம் மீன் பண்ணை அமைப்போருக்கு, 50 லட்சம் ரூபாயில், ஒரு கோடி மீன் குஞ்சுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.. சென்னை தவிர, தமிழகம் முழுதும் உள்ள 37 மாவட்டங்களில் செயல்பட்டு வரும், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ளவர்கள், தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து, அரசு திட்டங்களை பெற்று வருகின்றனர். மீன் வளர்ப்போர், மீன் குஞ்சுகளை கொள்முதல் செய்ய, அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
10000 மீன் குஞ்சுகள்
அதிகபட்சமாக 10,000 மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய, 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. 1 ஏக்கரில் மீன் வளர்க்க விரும்புவோருக்கு, 3,000 மீன் குஞ்சுகள் வழங்கப்படும்... மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை மற்றும் ரகத்தை பொறுத்து, அதன் விலை மாறுபடும். எட்டு மாதங்கள் வளர்த்த பின், அவற்றை நல்ல விலைக்கு விற்கலாம்.
இத்திட்டம் குறித்த சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெற, அருகில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்" என்று மீன்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.. இந்த அறிவிப்பானது சுயதொழில் செய்யும் முடிவில் உள்ளோருக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications