லாட்ஜில் உல்லாச வாழ்க்கை.. கல்யாண ஆசை காட்டி விரட்டி விட்ட பெங்களூரு காதலன்.. போலீசுக்கு ஓடிய பெண்
சென்னை: மதம் மாறினால்தான் திருமணம் செய்வேன் என்று கறாராக சொல்லிய காதலன் மீது, பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகாரை தந்துள்ளார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரின் விசாரணையும் நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது! காதலன் மீது அவர் சொல்லும் புகார்கள் என்ன என்பது குறித்து இங்கே நாம் விரிவாக பார்க்கலாம்.
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, பல்வேறு மதங்கள் உள்ளன. அதைப் பல்வேறு தரப்பினரும் பின்பற்றி வருகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் ஆகச்சிறந்த பலமாக உள்ளது.

எனினும் ஒருசில தனிப்பட்ட நபர்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பான செய்திகள் வெளியாகி, சோஷியல் மீடியாவிலும் விவாதத்தை கிளப்பிவிடுகிறது. அப்படியொரு சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடந்துள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானவர் அப்துல் ரசல்.. இவருக்கு 28 வயதாகிறது. பெங்களூரு HSR லே-அவுட் பகுதிகளில் வசித்து வருகிறார்.
கடந்த வருடம்தான் இன்ஸ்டாகிராம் மூலம் இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. நாளடைவில் இது காதலாகவும் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தனர். ஆனால், இளம்பெண் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை திருமணம் செய்ய முகமது இசாக் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இன்ஸ்டாகிராம் காதலர்கள்
திருமணம் செய்வதாக வாக்குறுதி தந்துவிட்டு, தற்போது மதத்தை காரணம் காட்டி விலகி செல்வதை அறிந்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். உடனே இந்த விவகாரம் குறித்து HSR லே-அவுட் போலீஸ் ஸ்டேஷனில் முகமது இசாக் மீது புகாரும் தந்தார்.
அந்த புகாரில், "எனக்கும், முகமது இசாக்குக்கும் கடந்த வருடம் பழக்கம் ஏற்பட்டது. என்னை காதலிப்பதாக சொன்னார்.. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30ம் தேதி என்னை பெங்களூருவுக்கு வரச்சொன்னார்.. அதன்படியே நானும் பெங்களூர் சென்றேன்.
லாட்ஜில் உல்லாசம்
அங்கே தனிச்சந்திராவில் உள்ள லாட்ஜூக்கு அழைத்து சென்ற முகமது இசாக், திருமண ஆசைகாட்டி என்னை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார். அதன்பிறகு, அடிக்கடி என்னை ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்தார்.
கடந்த மாதம் முகமது இசாக்குக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது பற்றி எனக்கு தெரியவந்தது.. இதுகுறித்து நான் கேட்டதற்கு என்னுடன் தகராறு செய்தார். மேலும் என்னை திருமணம் செய்யவும் அவர் மறுத்து விட்டார். அவர் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் கடந்த செப்டம்பர் மாதம் நான் தற்கொலைக்கு முயன்றேன்.
திருமண நிச்சயதார்த்தம்
பிறகு முகமது இசாக் குடும்பத்தினர் என்னை அழைத்து சமாதான பேச்சு நடத்தினார்கள்.. அப்போது முஸ்லிம் மதத்திற்கு மாறினால்தான் திருமணம் செய்வேன் என்று முகமது இசாக், அவரது குடும்பத்தினர் தெரிவித்து விட்டனர். ஆனால் நான் மதம் மாறுவதற்கு மறுத்தேன்.
இப்போது வேறொரு முஸ்லிம் பெண்ணுடன், முகமது இசாக்குக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வேறு மதத்தை சேர்ந்த என்னை காதலித்து, பலாத்காரம் செய்துவிட்டு, தற்போது மதம் மாறினால் தான் திருமணம் செய்வேன் என்கிறார்" என்று புகாரில் அப்பெண் கேட்டுக் கொண்டிருந்தார்..












Click it and Unblock the Notifications