சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலாவுக்கு டைம் சரியில்லை.. 2 நாள் வருமான வரி விசாரணைக்கு சிறை அனுமதி

சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான 187 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள்.

இந்த ரெய்டில் வருமான வரித்துறையினர் வசம் ஏராளமான ஆவணங்கள், நகைகள், பணம், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மவுன விரதம்

மவுன விரதம்

எனவே சோதனையில் சிக்கிய பொருட்கள், ஆவணங்கள் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை, ஏற்கனவே சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருந்தது. இது சம்பந்தமாக பரப்பரன அக்ரஹாரா சிறைக்கு கடிதமும் எழுதி இருந்தது. ஆனால், அதற்கு சசிகலா மவுன விரதம் இருப்பதால் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

அனுமதி கடிதம்

அனுமதி கடிதம்

அதற்கு பிறகு கடந்த வாரம் மீண்டும் சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு வரும் 13, 14 தேதிகளில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இன்னொரு கடிதம் வருமான வரித்துறை திரும்பவும் அனுமதி கேட்டார்கள். இந்த கடிதத்திற்கு தற்போது சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

சிறை அதிகாரிகள்

சிறை அதிகாரிகள்

அந்த கடிதத்தில், 13, 14 ஆகிய 2 நாட்களில் சசிகலாவிடம் விசாரணை நடத்தலாம் என்றும், அதே சமயம் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த விசாரணையில் இடம்பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி விசாரணை

நேரடி விசாரணை

எனவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் அதிகாரிகள் சிறைக்கு சென்று சசிகலாவை ஒரு தனி அறையில் அமர வைத்து நேரடி விசாரணையில் இறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Bengaluru Jail Permission to the Income Tax Department to inquire Sasikala on December 13 and 14
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X